• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

9-6 என்ற கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது பிபிஜி புனே ஜாக்குவார்ஸ்! | யுடிடி சீசன் 6 | UTT Season 6: Reeth Rishya, Anirban Ghosh star in PBG Pune Jaguars comeback win vs U Mumba

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
9-6 என்ற கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது பிபிஜி புனே ஜாக்குவார்ஸ்! | யுடிடி சீசன் 6 | UTT Season 6: Reeth Rishya, Anirban Ghosh star in PBG Pune Jaguars comeback win vs U Mumba
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா – பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஆல்வரோ ராபிள்ஸை (ஸ்பெயின்) எதிர்த்து விளையாடினார். இதில் லிலியன் பார்டெட் 2:1 (11-1, 11-4, 8-11) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சோக்ஸ் (ருமேனியா), புனே ஜாக்குவார்ஸ் அணியின் தினா மெஷ்ரெஃப்பை (எகிப்து) எதிர்கொண்டார். இதில் பெர்னாடெட் சோக்ஸ் 2:1 (5-11, 11-10, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி, புனே ஜாக்குவார்ஸ் அணியின் தினா மெஷ்ரெஃப், அனிர்பன் கோஷ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் முதல் செட்டை பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி 11-7 என கைப்பற்றியது. 2-வது செட்டில் பதிலடி கொடுத்த தினா மெஷ்ரெஃப், அனிர்பன் கோஷ் அந்த செட்டை 11-7 என தன்வசப்படுத்தியது.

கடைசி செட் ஒரு கட்டத்தில் 8-8 என சமநிலையில் இருந்தது. அப்போது புனே ஜாக்குவார்ஸ் அணியின் ஜோடி அடுத்தடுத்து 2 புள்ளிகளை பெற்று 10-8 என முன்னிலை பெற்றது. ஆனால் பெர்னாடெட் சோக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி போராடி 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தது. எனினும் தினா மெஷ்ரெஃப், அனிர்பன் கோஷ் இந்த செட்டை 11-10 என கைப்பற்றியது. முடிவில் தினா மெஷ்ரெஃப், அனிர்பன் கோஷ் ஜோடி 2:1 (7-11, 11-7, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் இந்த டையில் புனே ஜாக்குவார்ஸ் 4-5 என நெருங்கி வந்தது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் ஆகாஷ் பால், புனே ஜாக்குவார்ஸ் அணியின் அனிர்பன் கோஷுடன் மோதினார். இரு இளம் இந்திய வீரர்கள் மோதிய இந்த ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

இதில் முதல் செட்டை அனிர்பன் கோஷ் 11-6 என கைப்பற்றினார். 2-வது செட்டில் ஆகாஷ் பால் 5-9 என பின்தங்கியிருந்தார். ஆனால் அங்கிருந்து அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து 11-10 என அந்த செட்டை கைப்பற்றினார். ஆனால் கடைசி செட்டை அனிர்பன் கோஷ் 11-8 என வென்றார். முடிவில் அனிர்பன் கோஷ் 2:1 (6-11, 11-10, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகள் இடையிலான மோதல் 6-6 என சமநிலையில் இருந்தது. 5-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் சுவஷ்திகா கோஷ், புனே ஜாக்குவார்ஸ் அணியின் ரீத் ரிஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இரு இந்திய வீராங்கனைகள் மோதிய வெற்றியை தீர்மானிக்கக்கூடிய இந்த ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை உண்டாக்கியது.

இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆட்டம் 6-6 என சமநிலையில் இருந்தது. தொடர்ந்து 8-8 என ஆட்டம் நகர்ந்தது. இதன் பின்னர் 9-9 என சமநிலையில் இருந்தது. ஆனால் சென்னையை சேர்ந்த ரீத் ரிஷ்யா தொடர்ச்சியாக 2 புள்ளிகளை குவித்து 11-9 என முதல் செட்டை கைப்பற்றினார்.

2-வது செட்டில் ரீத் ரிஷ்யா தொடக்கத்தில் பின் தங்கியிருந்தாலும் தனது அனுபவத்தால் மீண்டு வந்து 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தார். நெருக்கமாக அமைந்த இந்த செட்டை ரீத் ரிஷ்யா 11-10 என கைப்பற்றினார். இந்த செட்டை அவர், கைப்பற்றியதால் பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணி இந்த மோதலை 8-6 என தன்வசப்படுத்தியது.

கடைசி செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ரீத் ரிஷ்யா 8-4 என்ற நிலைக்கு சென்றார். தொடர்ந்து ரீத் ரிஷ்யா 11-6 என செட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தார். முடிவில் ரீத் ரிஷ்யா 3:0 (11-9, 11-10, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த மோதலில் பிபிஜி புனே ஜாக்குவார்ஸ் அணி 9-6 என வென்றது. இந்த மோதலில் சிறந்த இந்திய வீராங்கனைக்கான விருதை ரீத் ரிஷ்யா பெற்றார். புனித் பாலன் குழுமம் சார்பில் அவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.



Read More

Previous Post

பிரதமர் மோடி – ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

Next Post

போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்கிறார் பிரதமர் – Malaysiakini

Next Post
போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்கிறார் பிரதமர் – Malaysiakini

போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் என்கிறார் பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin