• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

9% வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்! – யாருக்கெல்லாம் கிடைக்கும்?

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
9% வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்! – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எத்தனையோ முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும் உத்தரவாதமிக்க ரிட்டர்ன் தரக்கூடியதாகவும் ஃபிக்ஸட் டெபாசிட் திகழ்கிறது. அதனால் தான் பலரும் தாங்கள் சேமித்த பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் உள்ள பல சிறு நிதி வங்கிகள் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான தங்களது வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. பல சிறு நிதி வங்கிகளுக்கு மத்தியில் உஜ்ஜிவன் சிறு நிதி வங்கியும் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை குறிப்பிடத்தகுந்தளவு மாற்றம் செய்துள்ளது. அதன்படி தங்களது வாடிக்கையாளர்களுக்கு 3.75 சதவிகிதம் முதல் 8.50 சதவிகிதம் வரையில் வட்டி வழங்குகிறது உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி.

விளம்பரம்

15 மாதங்கள் வரை காலஅளவு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்சமாக 8.50 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது இவ்வங்கி. இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 9 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் மார்ச் 7-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

தற்போது புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதங்களின் படி, 15 மாதங்களில் முதிர்வடையும் டெர்ம் டெபாசிட் திட்டத்தில் ஒருவர் ரூ.2 கோடி வரை முதலீடு செய்தால், அவருக்கு 8.50 சதவிகித வட்டி வழங்கப்படும். அதே போல் 560 நாளில் முதிர்ச்சியடையும் திட்டத்திற்கு 8.25 சதவிகித வட்டி வழங்குகிறது இந்த சிறு நிதி வங்கி. இதற்கு அடுத்தபடியாக 991 நாட்களிலிருந்து 60 மாதங்களில் முதிர்வடையும் டெபாசிட் திட்டத்திற்கு 7.20 சதவிகிதமும் ஒரு நாள் முதல் 120 மாதங்கள் வரை முதிர்வடையும் திட்டத்திற்கு 6.50 சதவிகித வட்டியும் வழங்குகிறது உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி.

விளம்பரம்

இதையும் படிங்க: 
PPF vs VPF: இரண்டில் எது சிறந்தது தெரியுமா? உங்களுக்கான பதில் இதோ!!!

இதுமட்டுமின்றி, 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்குகிறது இந்த சிறு நிதி வங்கி. உஜ்ஜிவன் சிறு நிதி வங்கியின் ஆன்லைன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

உஜ்ஜிவன் சிறு நிதி வங்கியில் பல்வேறு வகையான வட்டி விகித பேமெண்ட் ஆப்ஷன் உள்ளது. இந்த சிறு நிதி வங்கியில் உள்ள பிளாட்டினா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடி வரையில் முதலீடு செய்யும் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே கூடுதலாக 0.20 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.

விளம்பரம்

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கான வட்டித் தொகையை மாதம்தோறும் அல்லது காலண்டிற்கு ஒருமுறை அல்லது திட்டம் முதிர்வடையும் போது எனப் பல வழிகளில் வாங்கிக்கொள்ள முடியும். உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி தவிர மேலும் இரண்டு சிறு நிதி வங்கிகளான ஷிவாலிக் வங்கி மற்றும் சூர்யோதயா வங்கியும் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான தங்களது வட்டி விகிதங்களை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

கேண்டிடேட்ஸ் செஸ் இன்று தொடக்கம்: பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் மீது எதிர்பார்ப்பு | Candidates Chess Begins Today Expectation on Praggnanandhaa D Gukesh vidit

Next Post

‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ – 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம் | Lost everything says Sam Bankman after being sentenced to 25 years in prison

Next Post
‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ – 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம் | Lost everything says Sam Bankman after being sentenced to 25 years in prison

‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ - 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம் | Lost everything says Sam Bankman after being sentenced to 25 years in prison

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin