• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

9 முறை விம்பிள்டன் சாம்பியன்.. ஆனால் விம்பிள்டன் கஃபேவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
9 முறை விம்பிள்டன் சாம்பியன்.. ஆனால் விம்பிள்டன் கஃபேவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 10:02 PM IST

விம்பிள்டன் சாம்பியன் மார்டினா நவ்ரதிலோவா தனது நாயுடன் கஃபேவுக்குள் நுழைய மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, அவரது எளிமையை வெளிப்படுத்தியது.

விம்பிள்டன் சாம்பியனும், பிரபலமுமான நவ்ரதிலோவா தனது நாயுடன் புகழ்பெற்ற கஃபேவுக்குள் நுழைய மறுக்கப்பட்ட நிலையில், இந்த சுவாரஸ்யமான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது.

விம்பிள்டனில் ஒன்பது முறை பட்டம் வென்றவர் என்கிற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் மார்டினா நவ்ரதிலோவாவுக்கு விம்பிள்டனில் உள்ள ஒரு பிரபல உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தனது செல்ல நாயான லுலுவுடன் அந்த உணவத்திற்கு சென்ற நிலையில், அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு, விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் பல்வேறு வெற்றிகளை குவித்த டென்னிஸ் ஜாம்பவான் மார்டினா நவ்ரதிலோவா, ஒரு உணவகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த நவ்ரதிலோவா, “ஐவியில் இரவு உணவு சாப்பிட முயற்சித்தேன்… ஆனால் லுலுவை உள்ளே அனுமதிக்கவில்லை” என்று குறும்பாக எழுதியுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகிய நிலையில், ரசிகர்களிடையே இந்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர், “பிளான் பி” என மற்றொரு இடத்திற்கு சென்று, பாஸ்தாவுடன் சிறந்த உணவை ரசித்ததாகவும், முக்கியமாக லுலுவும் அங்கு வரவேற்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அவரது எளிமையான மனப்பான்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.  இவரது பதிவு வைரலானதைத் தொடர்ந்து பலரும் அவரது எளிமையை பாராட்டிய நிலையில, ஒரு யூசர், “நீங்கள் ஒரு உண்மையான லெஜண்ட்” என குறிப்பிட்டிருக்கிறார்.  இன்னொருவர், “செல்லப்பிராணிகளுக்கு மரியாதை காட்டும் இடமே உண்மையான சிறந்த உணவகம்” என பாராட்டினார்.

இந்த சம்பவம் வெறும் நகைச்சுவையோடு மட்டுமே முடிவடையவில்லை. இது, 2022-ல் மற்றொரு டென்னில் சாம்பியனான ரோஜர் ஃபெடரருக்கு விம்பிள்டனுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கதையை நினைவுப்படுத்தியது. அப்போது தனது உறுப்பினர் அட்டையை மறந்த ஃபெடரர், “நான் இந்த போட்டியை எட்டு முறை வென்றவன்!” என சொல்வதோடு, கடைசியில் ரசிகர் ஒருவர் அடையாளம் கண்டதால் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

முக்கியமாக, நவ்ரதிலோவா போன்ற லெஜண்டுகளுக்கும் வெறும் அட்டைகள் இல்லையெனில், காத்திருத்தல் அல்லது மறுப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படலாம் என்பதையும், இந்தச் சம்பவங்கள் ஒரு புன்னகையுடனும், நெகிழ்ச்சியுடனும் முடிவடையலாம் என்பதையும் இந்த நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

இந்த சம்பவங்கள் எளிமையானவை போலத் தோன்றினாலும், அவை முக்கியமான சிந்தனைகளைத் தூண்டும் தருணங்களாகவே இருக்கின்றன. புகழின் உச்சிக்கே சென்றவர்களும், சாதாரண விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை இது நினைவூட்டுகின்றன. நவ்ரதிலோவாவும், ஃபெடரரும் அத்தனை புகழுடன் இருந்தும், தடைகளை எதிர்கொண்ட போது அன்பாகவும், பணிவுடனும் நடந்து கொண்டது அவர்களின் எளிமையைக் காட்டுகிறது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 13, 2025 10:02 PM IST

Read More

Previous Post

590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு | Monthly incentive for 590 Vedic scholars

Next Post

9 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும்: புஸியா சாலே | Makkal Osai

Next Post
9 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும்: புஸியா சாலே | Makkal Osai

9 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்படும்: புஸியா சாலே | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin