Last Updated:
புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு 17 வயது சிறுவன் மற்றும் ஆகாஷ் உட்பட 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். இருந்தபோதும் பெற்றோர் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பாகூர் பகுதியில் இருந்த சிறுமியை, பெற்றோர் மீட்டுள்ளனர். திடீரென காணாமல் போனதுடன், தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி கூறியதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பின்னர், சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 17 வயது சிறுவன் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரின் உள்நோக்கம் தெரியாமலும் சிறுமியும் அவருடன் பழகி வந்துள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று அந்த சிறுவன் பாகூரில் பகுதியில் வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலன் மட்டும் இன்றி மேலும் மூன்று பேர் இருந்துள்ளனர். அதைக் கண்டதும் சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது, சிறுமியை மிரட்டி அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து காதலன் என்ற போர்வையில் மாணவியை ஏமாற்றிய 17 வயது சிறுவன் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 18 வயதான ஆகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
எஞ்சிய இரு சிறுவர்களையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். கொடூர செயலில் ஈட்ட 4 பேரில் ஆகாஷ் தவிர்த்து, மற்ற மூன்று பேரும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெட்டியாக ஊர் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக நாடகமாடி அவரை கடத்திச் சென்ற 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry (Pondicherry)
9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை… காதலனை நம்பி ஏமாற்றம்.. புதுச்சேரியில் அதிர்ச்சி!


