• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

85 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைப்புத் திட்டம்… இமாச்சல பிரதேசத்தில் படுஜோராக நடைபெறும் பணிகள்!

GenevaTimes by GenevaTimes
July 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
85 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைப்புத் திட்டம்… இமாச்சல பிரதேசத்தில் படுஜோராக நடைபெறும் பணிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயர் தொழில்நுட்பம் கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலைகள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 8-வழி, 4-வழி மற்றும் உயர்த்தப்பட்ட அதிவிரைவு சாலைகள் போன்றவை அடங்கும். இந்த அதிவிரைவு சாலைகளில் பல்வேறு வசதிகளுடன் சேர்த்து தானியங்கி சுங்கவரி அமைப்பு அமைக்கப்பட உள்ளதே இதன் சிறப்பு அம்சமாக அமைகிறது. இமாச்சல் பிரதேசத்தில் 85 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4-வழி சாலை நிலத்தடி பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த 4-வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (National Highway Authority of India – NHAI) மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து தேவையான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த 85 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலையில் பல சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.

விளம்பரம்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 68 சுரங்கங்களை NHAI அமைக்க உள்ளது. இவற்றில் 11 சுரங்கங்களுக்கான வேலைகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. மேலும் 27 சுரங்கங்கள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த 4-வழி நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையின் 50 சதவீதத்திற்கும் அதிகமான வேலை ஏற்கனவே முடிவடைந்து விட்டது.

கடந்த வருடம் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட மழை சீற்றம் காரணமாக குளு மற்றும் மண்டியில் அமைந்துள்ள கிராத்பூர் மணாலி நெடுஞ்சாலை அதிக சேதத்திற்கு உள்ளானது. கூடுதலாக, பதான் கோட்-மாண்டி மற்றும் பிஞ்சோர்-நாலாகர் நெடுஞ்சாலையும் சீற்றம் காரணமாக பாதிப்புக்குள்ளானது. நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட இந்த சேதங்களை அடுத்து, நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்து விட்டு, சுரங்கங்கள் அமைப்பதற்கான பரிந்துரைகளை NHAI பெற்றது. இந்த பரிந்துரைகளின் பெயரில் பெரும்பாலான 4-வழி நெடுஞ்சாலைகளை சுரங்கங்களாக மாற்றுவதற்கான வேலைகளில் NHAI ஈடுபட்டுள்ளது.

விளம்பரம்

இந்த சுரங்கங்களை அமைப்பதன் மூலமாக மாநிலத்தில் உள்ள அனைத்து 4-வழி சாலைகளின் தூரம் 126 கிலோ மீட்டர் குறையும் என்பதால் பயணிகளின் பயண நேரமும் 13 மணி நேரத்திற்கு குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்படும் பனிப்பொழிவு மற்றும் மழையால் எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

இதையும் படிக்க:
LPG இன்சூரன்ஸ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இமாச்சல் பிரதேசத்தில் பதான் கோட் – மண்டி, கல்கா – சிமல், சிம்லா – மாத்தூர், கிராத்பூர் – மணாலி மற்றும் பிஞ்சோர் – நால்கர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் 68 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 41 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிராத்பூர் மணாலி நெடுஞ்சாலையில் மட்டுமே 28 சுரங்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

விளம்பரம்

இது ஒருபுறம் இருக்க, மார்ச் மாதத்தில் மும்பை நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான நிலத்தடி சாலையை மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3.93 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நிலத்தடி சாலையில் இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:
இந்தியாவின் 2வது மிக நீளமான விரைவுச் சாலை… எங்கு கட்டப்படுகிறது தெரியுமா?

சுரங்கங்களில் லைட்டிங்கை வடிவமைப்பது மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருந்தன. மேம்படுத்தப்பட்ட LED தொழில்நுட்பம் மற்றும் இன்டெலிஜென்ட் கண்ட்ரோல் சிஸ்டம் மூலமாக இந்த சுரங்கங்ளில் சிறந்த லைட்டிங் அமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வெறும் 15 நிமிடத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம்!

Next Post

பர்சனல் லோனுக்கு அப்ளை பண்றீங்களா? இதையெல்லாம் மறக்காமல் கவனியுங்கள்!

Next Post
பர்சனல் லோனுக்கு அப்ளை பண்றீங்களா? இதையெல்லாம் மறக்காமல் கவனியுங்கள்!

பர்சனல் லோனுக்கு அப்ளை பண்றீங்களா? இதையெல்லாம் மறக்காமல் கவனியுங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin