• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

83 ஒரு கறுப்புப் புள்ளி: 13 யை அமல்படுத்துவோம்: சஜித்

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
83 ஒரு கறுப்புப் புள்ளி: 13 யை அமல்படுத்துவோம்: சஜித்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டில் ஓரம்கட்டப்பட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் ஊடாக, காணி அதிகாரங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் அதனை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பது ஐக்கிய மக்கள் சக்தியின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9, 2026) இடம்பெற்ற, 1983 கறுப்பு ஜூலையின் போது நடந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:


பெரும்பான்மை, சிறுபான்மை என்று பாராளுமன்றத்தில் சிலர் விளித்தாலும், பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்பதை விடுத்து, ஒட்டுமொத்த இலங்கையர்கள் என்ற அடையாளத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன, மத, சாதி, வகுப்பு மற்றும் கட்சிப் பேதமின்றி ஒரு நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்துக்கொண்டு, ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்வதே உண்மையான தேசியவாதமாகும்.


நமது நாட்டில் ஓரம்கட்டப்பட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட பிரதான யோசனையாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கருதப்படுகின்றது. அதனால், 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் காணி அதிகாரங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் அதனை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பது நமது பொறுப்பாகும். ஒருமித்த நாட்டிற்குள் உச்சக்கட்ட அதிகாரப் பகிர்வு 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவே இடம்பெறுகின்றது.


இது தொடர்பாக நமது நாட்டில் பலரும் பல விதமான வியாக்கியானங்களை முன்வைக்கின்றனர். யார் எவ்வாறு இதனை விளித்தாலும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். ஒருமித்தப்பாடு, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் இதன் மூலம் பாதுகாக்கப்படுவதால், அந்த வாக்குறுதியை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றும்.


அவ்வாறே, மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும். அதனை நடத்தத் தவறுவது இறையாண்மைக்கும் மக்கள் இறைமைக்கும் விடப்படும் மரண அடியாகும். காணியை இழந்த மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதுடன், தேசியப் பாதுகாப்புக்குப் பாதகம் ஏற்படாத வகையில் காணி உரிமையை வழங்க வேண்டும். ஏதேனும் காரணத்தினால் காணி வழங்க முடியாதவிடத்து, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் அதற்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.


கபீர் ஹாசிமின் புதல்வி சாரா கபீர் ‘Tear Drop Nation’ என்ற பெயரில் பெறுமதியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். தனிப்பட்ட அபிப்பிராயங்களை ஒதுக்கிவிட்டு இத்திரைப்படத்தைப் பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்றில்லாமல் இலங்கையர் என்ற தன்மையை உறுதிப்படுத்த கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 



Read More

Previous Post

ஓடிடியில் வெளியாகும் ஊர்வசியின் ‘ஆஷா’ திரைப்படம் – எப்போது, எங்கு பார்க்கலாம்?

Next Post

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin