Last Updated:
இங்கிலாந்து அணி வெற்றிபெற 435 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3 வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
முதல் 2 டெஸ்ட்களை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 371 ரன்களும், இங்கிலாந்து 286 ரன்களும் எடுத்தன.
ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்க்ஸில் 349 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி வெற்றிபெற 435 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துள்ளது.


