Last Updated:
சாதாரண ரோ-ரோ கப்பலின் கொள்ளளவை விட இருமடங்கு அதிகமாக, கையாளும் திறன் கொண்டது இந்த சரக்குக்கப்பல்.
8,000 கார்களை சுமந்து கொண்டு சீனாவில் இருந்து ஐரோப்பா நோக்கி பிரமாண்டமான சரக்கு ஒன்று தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது.
வழக்கமான சரக்குக் கப்பல்களை போலல்லாமல், வாகனங்களை நேரடியாக உள்ளேயும், வெளியேயும் ஓட்டிச் செல்ல அனுமதிக்கும் வகையில், சரிவுப்பாதைகளுடன் ‘க்ளோவிச் லைட்ஹவுஸ்’ (Glovis Lighthouse) என்ற சரக்கு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரோல்-ஆன்/ரோல்-ஆஃப் கப்பல்களில் ஒன்றான இந்த கப்பல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சியாவோமோ துறைமுகத்திலிருந்து 8000-க்கும் மேற்பட்ட புதிய கார்களை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவிற்கான தனது முதல் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கியது. 230 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில், 14 தளங்களைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளது. இது ஒரு சாதாரண ரோ-ரோ கப்பலின் கொள்ளளவை விட இருமடங்கு அதிகமாக, அதாவது 10,800 வாகனங்களை கையாளும் திறன் கொண்டது.
Jun 15, 2026 10:58 AM IST


