• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

8-வது ஊதியக் குழு தலைவர் நியமனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet chaired by Pm Modi approves for appointment of 8th Pay Commission Chairman

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
8-வது ஊதியக் குழு தலைவர் நியமனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet chaired by Pm Modi approves for appointment of 8th Pay Commission Chairman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் திருத்​தம் செய்​வதற்​கான 8-வது ஊதி​யக் குழு உறுப்​பினர்​கள் நியமனத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இக்​குழு 18 மாதங்​களில் தனது பரிந்​துரைகளை மத்​திய அரசிடம் சமர்ப்​பிக்​கும். மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யம் மறு ஆய்வு குறித்து ஆராய 8-வது ஊதி​யக் குழு அமைப்​ப​தற்கு பிரதமர் மோடி தலை​மையி​லான அமைச்​சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்​புதல் வழங்​கியது.

இந்​நிலை​யில், மத்​திய அமைச்​சகங்​கள், மாநில அரசுகள் மற்​றும் கூட்டு ஆலோ​சனைக் குழு ஆகிய​வற்​றுடன் கலந்​தாலோ​சித்த பிறகு, 8-வது ஊதி​யக் குழு​வின் செயல்​பாட்​டுக்​கான விதி​முறை​கள் (டிஓஆர்) இறுதி செய்​யப்​பட்​டன. இதற்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது என்று மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் செய்​தி​யாளர்​களிடம் அறி​வித்​தார்.

இதன்​படி 50 லட்​சம் மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் திருத்​தம் செய்​வது மற்​றும் 69 லட்​சம் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் சலுகை​களில் திருத்​தம் செய்​வது குறித்து இக்​குழு ஆய்வு செய்து பரிந்​துரை அளிக்​கும். 8-வது ஊதி​யக் குழு​வின் தலை​வ​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ரஞ்​சனா பிர​காஷ் தேசாய் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இக்​குழு உறுப்​பின​ராக பெங்​களூரு பேராசிரியர் புலக் கோஷ் மற்​றும் உறுப்​பினர் – செயல​ராக பங்​கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ரஞ்​சனா பிர​காஷ் தேசாய் தலை​மையி​லான 8-வது ஊதி​யக் குழு, மத்​திய அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் ஊதி​யம் மற்​றும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்து 18 மாதங்​களில் தனது பரிந்​துரைகளை சமர்ப்​பிக்​கும்.

மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்தை திருத்​தம் செய்​வதற்கு ஒவ்​வொரு 10 ஆண்​டுக்​கும் ஒரு முறை ஊதி​யக் குழுவை மத்​திய அரசு அமைக்​கிறது. அதன்​படி 7-வது ஊதி​யக் குழு கடந்த 2014-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் அமைக்​கப்​பட்​டது. அதன் பரிந்​துரைகளை மத்​திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமல்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், 8-வது ஊதி​யக் குழு​வின் பரிந்​துரைகளை மத்​திய அரசு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்​படுத்த வேண்​டும்.

2028 முதல் அமலாகும்: ஆனால், 8-வது ஊதி​யக் குழு தனது பரிந்​துரைகளை 2027-ம் ஆண்​டின் முதல் காலாண்​டில் வழங்​கி​னால், 2028 முதல் காலாண்​டுக்​குள் அமலுக்கு வரும். எனினும், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி​யிட்டு ஊதிய திருத்​தங்​கள் அமல்​படுத்​தப்​படும். அதன்​படி நிலுவை தொகையை மத்​திய அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் பெறு​வார்​கள்.மேலும், பணவீக்​கத்​துக்கு ஏற்ப மத்​திய அரசு ஊழியர்​களுக்கு 6 மாதத்​துக்கு ஒரு முறை அகவிலைப் படி (டிஏ) மாற்​றி அமைக்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

ரணில் எனும் எதிர்கட்சிகளின் பொக்கிசம்

Next Post

Ind vs Aus | ஆட்டம்காட்டிய மழை.. இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ரத்து | விளையாட்டு

Next Post
Ind vs Aus | ஆட்டம்காட்டிய மழை.. இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ரத்து | விளையாட்டு

Ind vs Aus | ஆட்டம்காட்டிய மழை.. இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி ரத்து | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin