• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“8 லட்சம் பேர் இருந்தும் இந்திய ராணுவம் உபயோகமற்றது” – ஷாஹித் அஃப்ரிடி சர்ச்சை பேச்சு!

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“8 லட்சம் பேர் இருந்தும் இந்திய ராணுவம் உபயோகமற்றது” – ஷாஹித் அஃப்ரிடி சர்ச்சை பேச்சு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 28, 2025 9:54 PM IST

இந்திய ராணுவத்தில் 8 லட்சம் பேர் இருந்தாலும், மக்களை அவர்களால் காப்பாற்ற முடியாமல் உபயோகமற்று இருப்பதாக அவர் கூறினார்.

News18News18
News18

இந்திய ராணுவம் உபயோகமற்றது என்று பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி பேசியிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், அது பற்றி பாகிஸ்தானிய ஊடகங்களுக்கு அஃப்ரிடி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அனைத்துக்கும் பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் பட்டாசு வெடித்தால் கூட அதற்கு பாகிஸ்தானைத்தான் இந்தியா குற்றம் சுமத்துகிறது என்றார்.

இந்திய ராணுவத்தில் 8 லட்சம் பேர் இருந்தாலும், மக்களை அவர்களால் காப்பாற்ற முடியாமல் உபயோகமற்று இருப்பதாக அவர் கூறினார். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய ஊடகங்கள் பாலிவுட் காட்சிகள் போல பல கதைகள் சொல்வதாகவும் அஃப்ரிடி விமர்சித்தார். பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை இந்தியா அளிக்க வேண்டும் என்றும் அஃப்ரிடி பேசியிருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

“இந்தியா பயங்கரவாதத்தைத் தானே செயல்படுத்துகிறது, அதன் சொந்த மக்களைக் கொன்றுவிடுகிறது, பின்னர் பாகிஸ்தான் மீது பழியைப் போடுகிறது” என்று அவர் கூறினார்.

அஃப்ரிடிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான், “கார்கிலிலும் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம். நீங்கள் ஏற்கனவே மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள். இன்னும் எவ்வளவு தான் தாழ்ந்து போவீர்கள்? அர்த்தமற்ற கருத்துக்களைச் சொல்வதற்குப் பதிலாக, உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உங்கள் மனதைப் பயன்படுத்தினால் நல்லது. எங்கள் இந்திய ராணுவத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 28, 2025 9:54 PM IST

Read More

Previous Post

இந்தியாவில் செயல்படும் பாகிஸ்தான் நாட்டு கடன் செயலி.. திடுக் தகவல்!

Next Post

சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | Additional token allocation for deed registration on Wednesday

Next Post
சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | Additional token allocation for deed registration on Wednesday

சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்! | Additional token allocation for deed registration on Wednesday

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin