கலுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை (08) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கேஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கலுத்துறை, வாத்துவ, வாஸ்கடுவ, மொரொன்துடுவ மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
நீர் வழங்கல் சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மன்னிப்புக் கோரியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

