• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

8 பேரை ஏமாற்றி திருமண மோசடி.. 9வது நபருக்கு தூண்டில் போட்டபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
8 பேரை ஏமாற்றி திருமண மோசடி.. 9வது நபருக்கு தூண்டில் போட்டபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செல்வா இயக்கத்தில் ஜீவன் நடிப்பில் வெளியான நான் அவன் இல்லை படத்தை, மராத்தியில் ரீமேக் செய்தது போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. ஆங்கில ஆசிரியை ஒருவர், நான் அவள் இல்லை என்ற ரேஞ்சுக்கு அப்பாவி ஆண்களிடம் நம்பிக்கை மோசடி செய்துள்ளார்… பணம் படைத்தவர், மனைவியை பிரிந்தவர்களை குறிவைத்து காய் நகர்த்திய, சதுரங்க ஆட்டம் ஆடியவரின் பின்னணி என்ன?

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சமீரா பாத்திமா. 35 வயதான இவர் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு குலாம் பதான் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு புயல் வீசியுள்ளது. அப்போது, குலாம் பதான் தன்னை தாக்கி துன்புறுத்துவதாக சமீரா பாத்திமா கூறியுள்ளார்.

அத்துடன், குடும்ப வன்முறை புகார் அளிப்பேன் என்று மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதையடுத்து, தான் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குலாம் பதான் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சமீராவை பிடித்தனர். ஆனால், 8 மாத கர்ப்பமாக இருந்த அவர், அதைக் காட்டி போலீசிடம் இருந்து தப்பியுள்ளார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கைக் குழந்தையுடன் சமீரா சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமாவை விஞ்சும் அளவிற்கு கிரைம் ஸ்டோரி அம்பலமாகியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியையான சமீரா பாத்திமாவுக்கு, ஏற்கனவே 12 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மேட்ரிமோனி மூலம் இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்களை டார்கெட் செய்து காய் நகர்த்தியுள்ளார்.

குறிப்பாக பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்புடன் இருக்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு வலை வீசியுள்ளார். இவரின், மாய வலையில் விழும் அப்பாவி ஆண்களிடம், தான் கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவித்து வருவதாக கூறியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு செவி சாய்க்கும் இளைஞர்களிடம் தேனாய் பேசி, தனது மோசடியை அரங்கேற்றியுள்ளார். பின்னர், முறைப்படி திருமணம் நடைபெற்றதும் சிறிது நாட்களில், தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அப்போது, சம்பந்தப்பட்ட ஆணுக்கு எதிராக பாலியல் மற்றும் துன்புறுத்தல் புகார்களை போலியாக உருவாக்கியுள்ளார். வேண்டுமென்றே குடும்ப வன்முறைக்கு ஆளானதாக போலி ஆதாரங்களை திரட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார்களை திரும்பப் பெற வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு சிட்டாய் பறந்துள்ளார்.

இதுபோன்று, ஒருவரிடம் 50 லட்சமும், மற்றவர்களிடம் 15 லட்சம், 10 லட்சம் என சுருட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்று, ரிசர்வ் வங்கி அதிகாரி உட்பட 8 பேரிடம் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சினிமாவில் ஏட்டு ஏகாம்பரத்திடம் பஞ்சாயத்துக்காக வருபவர்கள் போன்று, அடுத்தடுத்து சமீரா பாத்திமாவிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதில், கடைசியாக குலாம் பதான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நாக்பூரில் பிரபலமாக திகழும் ‘டோலி கி டாப்ரி’ என்ற டீக்கடையில் ஒருவரை சந்திக்க சமீரா வந்துள்ளார். அங்கு, போலீசார் சுற்றிவளைத்தபோது, அவர் ஒன்பதாவது திருமணத்திற்காக ஒருவரை சந்தித்து காய் நகர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கையும் களவுமாக சிக்கிய சமீரா பாத்திமாவுக்கு, போலீசார் செக் வைத்து கைது செய்தனர்.

அவர், 8 பேரைத் தான் ஏமாற்றினாரா? அல்லது வேறு யாரும் ஏமாந்துள்ளனரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் பேங்க் அதிகாரி உட்பட 8 பேரை ஏமாற்றி திருமண மோசடி செய்து, கோடிக்கணக்கில் சுருட்டிய கல்யாண ராணி கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 03, 2025 5:59 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

8 பேரை ஏமாற்றி திருமண மோசடி.. 9வது நபருக்கு தூண்டில் போட்டபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது?

Read More

Previous Post

மொத்த இளைஞர் சமுதாயத்துக்கே பேரிடி! ஆத்தரத்தில் நாமல்

Next Post

“மீண்டும் முயற்சி செய்கிறேன்” – விவாகரத்து முடிவை கைவிட்ட சாய்னா நேவால்! | Saina Nehwal changed her divorce decision

Next Post
“மீண்டும் முயற்சி செய்கிறேன்” – விவாகரத்து முடிவை கைவிட்ட சாய்னா நேவால்! | Saina Nehwal changed her divorce decision

“மீண்டும் முயற்சி செய்கிறேன்” - விவாகரத்து முடிவை கைவிட்ட சாய்னா நேவால்! | Saina Nehwal changed her divorce decision

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin