• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

8 டன் மளிகைப் பொருட்கள்… 2,500 ஷாம்பெய்ன் பாட்டில்கள்… 100 விமானங்களுடன் நடந்த பிரமாண்ட விருந்து!

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
8 டன் மளிகைப் பொருட்கள்… 2,500 ஷாம்பெய்ன் பாட்டில்கள்… 100 விமானங்களுடன் நடந்த பிரமாண்ட விருந்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகப் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம்தான் எங்கும் பேசுபொருளாக இருந்தது. முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி ஆகியோரின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை சுமார் ரூ.5,000 கோடி செலவில் மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் உலகில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் மிகவும் விலை உயர்ந்த திருமணமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

விளம்பரம்

ஆனால், வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த ஒரு கொண்டாட்டத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம். இந்த கொண்டாட்டத்தில் வெறும் 600 விருந்தினர்கள்தான் பங்கேற்றனர். ஆனால், 8 டன் மளிகைப் பொருட்கள், 2,700 கிலோ இறைச்சி, 2,500 ஷாம்பெய்ன் பாட்டில்கள், 1,000 ஒயின் பாட்டில்கள், பாரிசில் இருந்து சமையல்காரர்கள், சுவிட்சர்லாந்தில் இருந்து பந்தி பரிமாறுவோர், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட 10,000 தங்கத் தட்டுகள் ஆகியவை இந்த கொண்டாட்டத்தில் இடம்பெற்று இருந்தன.

பாரசீக பேரரசின் 2,500ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த 1971ல் நடைபெற்ற ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த விருந்தில் பல நாடுகளின் பேரரசர்கள், அரசர்கள், ராணிகள், இளவரசர்கள், ஷேக்குகள், சுல்தான்கள் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் 600 விருந்தினர்கள் பங்கேற்றனர். அப்போது செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 100 மில்லியன் டாலர்கள். ஆனால், இன்றைய பண மதிப்பில் ஒப்பிட்டு பார்த்தால், அந்த தொகை என்பது ரூ.5,000 கோடியை விட மிகவும் அதிகம்.

விளம்பரம்

ஈரானின் கடைசி மன்னர் முகமது ரேசா பஹ்லவி தான் இந்த விருந்தை நடத்தினார். அத்துடன் ஈரானின் தலைவிதி மாறிவிட்டது. முகமது ரேசா பஹ்லவி நடத்திய விருந்தில் பரிமாறப்பட்ட உணவை, 600 விருந்தினர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிட்டனர். நவீன வரலாற்றில் மிக நீண்ட மற்றும் ஆடம்பரமான விருந்தாக இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதையும் படிங்க:
ஒரே வார்த்தை தான்… திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து! – அதிரவைத்த தம்பதி

விளம்பரம்

விருந்தினர்களை தங்க வைப்பதற்காக பாலைவனத்தில் தற்காலிக நகரமே உருவாக்கப்பட்டது. இதற்காக பிரான்சில் இருந்து 40 டிரக்குகள், 100 விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மிகவும் விலை உயர்ந்த இந்த கொண்டாட்டத்தால் ஈரான் மக்கள் கடும் கோபம் அடைந்தனர். 1979ஆம் ஆண்டில் நிலைமை மோசமடைந்து, மன்னர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர், ஈரானில் மக்களாட்சி முறை கொண்டுவரப்பட்டது.

.

Read More

Previous Post

50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளில் இவ்வளவுதானா?

Next Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! - SG Tamilan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin