• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

8வது சம்பள கமிஷன்: Fitment Factor, சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்? | 8th Pay Commission 2026: Fitment Factor Scenarios, Report Deadline and Likely Salary Hike Date for Central Govt Employees

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
8வது சம்பள கமிஷன்: Fitment Factor, சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்? | 8th Pay Commission 2026: Fitment Factor Scenarios, Report Deadline and Likely Salary Hike Date for Central Govt Employees
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8வது சம்பள கமிஷன்: Fitment Factor, சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருப்பது 8வது சம்பள கமிஷன் அறிவிப்புகளை தான். இதன் மூலம் தான் அரசு ஊழியர்கள் சம்பளமும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியமும் உயர போகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள 7வது சம்பள கமிஷனின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 18,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது. 8வது சம்பள கமிஷன் கீழ் ஊதிய உயர்வு என்பது முற்றிலும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படும். உதாரணமாக, அரசு ஒருவேளை 3 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரை அங்கீகரித்தால், தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 18,000 ரூபாய் என்பது கணிசமாக உயர்ந்து மாதத்திற்கு 54,000(18,000 × 3) என மாறும்.

8வது சம்பள கமிஷன்: Fitment Factor,  சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்?

ஃபிட்மென்ட் ஃபேக்டர் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது சம்பள கமிஷனின் அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் இறுதி முடிவின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படும். அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான ஃபிட்மென்ட் ஃபேக்டர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பல்வேறு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

பாரதிய பிரதிபக்ஷா மஸ்தூர் சங் 4 என்ற அளவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளது. மற்ற அமைப்புகள் 3.83 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 8ஆவது சம்பள கமிஷனின் இறுதி பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் போது, நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடி பயனடைவார்கள்.

8வது சம்பள கமிஷன் கடந்த நவம்பர் 3, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த ஆணையத்திற்கு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாத காலக்கெடுவை வழங்கியுள்ளது. அந்த வகையில், இதன் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு மே மாதம் வாக்கில் நிறைவடையும்.

எனவே சம்பள கமிஷன் தனது அறிக்கையை அடுத்த 8 முதல் 9 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உண்மையான அமலாக்கம் மற்றும் பண பலன்கள் கைக்கு வருவது 2028ஆம் ஆண்டு ஜனவரி ஆகலாம்.

நாட்டின் விலைவாசி நிலவரம், குடும்பங்களுக்கு ஆகும் செலவு ஆகியவற்றை கொண்டு தான் ஃபிட்மண்ட் ஃபேக்டர் நியமனம் செய்யப்படுகிறது. சம்பள கமிஷன் பரிந்துரைகளை இறுதி செய்யும் பொருட்டு, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் பெறப்ப்டும் கருத்துகள் அடிப்படையில் தான் பரிந்துரைகள் தயாராகும்.

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8ஆவது சம்பள கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் இதர முக்கிய பரிந்துரைகள் குறித்த தெளிவான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலையில் பரவக்கூடிய கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ளன.சம்பள கமிஷனின் முழுமையான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, மத்திய அரசு எடுக்கும் இறுதிக்கட்ட முடிவுக்கு பின்னரே அதிகாரப்பூர்வமாக தெரியவரும். இதற்கு அடுத்த ஆண்டு மே வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது.

Share This Article

English summary

8th Pay Commission 2026: Fitment Factor Scenarios, Report Deadline and Likely Salary Hike Date for Central Govt Employees

8வது சம்பள கமிஷன்: Fitment Factor, சம்பள உயர்வு எப்போது இறுதி செய்யப்படும்? /The 8th Central Pay Commission, constituted on November 3, 2025, has an 18-month mandate to submit its report by May 2027, with salary and pension revisions expected to take effect from January 2028 onwards.

Story first published: Saturday, September 26, 2026, 18:05 [IST]

Other articles published on Sep 26, 2026

Read More

Previous Post

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் சுப்மன் கில்லுக்கு காயம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு

Next Post
பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு

பொலனறுவை சிறுநீரக மருத்துவமனை வெடிவிபத்து : மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin