• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

760 முறை கடலில் இறங்கி.. சுனாமி விழுங்கிய மனைவியை தேடும் ஜப்பான் கணவர்.. காரணம் அந்த கடைசி மெசேஜ் | Japanese Husband Dives 760 Times.. A Heartbreaking 15 Year Search for His Tsunami-Missing Wife

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
760 முறை கடலில் இறங்கி.. சுனாமி விழுங்கிய மனைவியை தேடும் ஜப்பான் கணவர்.. காரணம் அந்த கடைசி மெசேஜ் | Japanese Husband Dives 760 Times.. A Heartbreaking 15 Year Search for His Tsunami-Missing Wife
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Tuesday, September 22, 2026, 16:48 [IST]

டோக்கியோ: காணாமல் போன மனைவியை, ஓரிரு நாட்கள் நம்பிக்கையுடன் தேடுவார்கள்.. ஓரிரு மாதங்களும் தேடுவார்கள்.. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும், ஒவ்வொரு மாதமும் கடலுக்குள் இறங்கி தேடிக்கொண்டே இருக்க முடியுமா? ஜப்பானை சேர்ந்த யாசுவோ தகமாட்சு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். காரணம்.. கடைசியாக மனைவியிடம் இருந்து வந்த அந்த ஒரு மெசேஜ்..!!!

ஜப்பானின் ஒனாகவா நகரத்தை சேர்ந்தவர்கள் யசுவோ தகமட்சு – யுகோ தம்பதி.. 2011ம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானை 9.0 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கியது.

Japanese Husband

ஜப்பானில் சுனாமி

தொடர்ந்து 20 மீட்டர் சுனாமி அலைகள், ஒனாகவா நகரை குப்புற சாய்த்து போட்டது.. அதில்தான், ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த யுகோவும் சிக்கிக் கொண்டார்.. நிலைமை சீரியஸாவதை பார்த்து, யுகோவும் அவருடன் வேலை பார்த்தவர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கட்டிடத்தின் மேல் மாடிக்கு ஓடினார்கள்.. ஆனால் அந்த கட்டிடமும் சுனாமியின் தாக்கத்தில் இடிந்து விழுந்தது. அதன்பிறகு யுகோவை காணவில்லை.

ஆனால், சுனாமி தாக்குவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு, தனது கணவர் யசுவோ தகமட்சுவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார் யுகோ.. அதில், “நீங்க பத்திரமா இருக்கீங்களா? எனக்கு வீட்டுக்கு வரணும் போல இருக்கு” என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்..

Japanese Husband

மனைவி அனுப்பிய கடைசி மெசேஜ்

இதற்கு பிறகு, சில நாட்கள் கழித்து சுனாமி தாக்கிய பகுதியில் மீட்பு பணிகள் நடந்தன.. அப்போது இடிபாடுகளுக்கு நடுவில் யுகோவின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது.. அந்த செல்போனில், “சுனாமி ரொம்ப மோசமாக இருக்குங்க” என்று மெசேஜ் டைப் செய்துள்ளார்.. ஆனால், அதை கணவருக்கு அனுப்பவில்லை.. அதற்குள் சுனாமி அடித்து விட்டது போலும்.. செல்போனில் draftல் Save ஆகியிருந்த மனைவியின் இந்த வார்த்தைகள் சொற்கள் யசுவோவை மனதை துளைத்தெடுத்து விட்டது.

15 வருடம் முன்பு கோவையில் சாப்பிட்ட பிரியாணி.. ஜப்பான் சுற்றுலா பயணியின் தலையெழுத்தே மாறியது

15 வருடம் முன்பு கோவையில் சாப்பிட்ட பிரியாணி.. ஜப்பான் சுற்றுலா பயணியின் தலையெழுத்தே மாறியது

இதனால் மனைவியை தேட ஆரம்பித்தார்.. அரசு நடத்திய நிலப்பரப்புத் தேடுதல் பணிகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு விட்டன… ஆனால், மனைவியின் உடல்கூட கிடைக்காத நிலையில் யசுவோவால் தேடலை முடிக்க முடியவில்லை. வீட்டுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டாரே, தன் மனைவியை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற உறுதியோடு தேட ஆரம்பித்தார்.

டைவிங் பயிற்சி

ஆழ்கடலில் மனைவி சிக்கியிருப்பார் என்பதால், தனது 56-வது வயதில் ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியையும் இதற்காகவே கற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, பசிபிக் பெருங்கடலின் குளிர்ந்த நீரில் மாதம் 2 முறை இறங்கித் தேடத் தொடங்கினார். இதுவரை 760-க்கும் மேற்பட்ட முறை கடலுக்குள் சென்று தேடிவிட்டார். அப்போதெல்லாம் ஆழ்கடலில் கிடக்கும் பழைய ஆல்பங்கள், உடைகள் போன்ற எத்தனையோ மனிதர்களின் அடையாளங்களை யசுவோ கண்டெடுத்துள்ளார். ஆனால், தனது மனைவி யுகோவின் ஒரு சின்ன தடயம்கூட அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

பிரேமலதா சொன்னது உண்மையா? Maths-ல் கடன் வாங்காமல் கழிக்க முடியுமா? ஜப்பான் Subtraction டிரிக்ஸ்!

பிரேமலதா சொன்னது உண்மையா? Maths-ல் கடன் வாங்காமல் கழிக்க முடியுமா? ஜப்பான் Subtraction டிரிக்ஸ்!

760 முறை கடலில் குதித்து தேடி…

15 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுகோவின் தடயம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும், மாதத்திற்கு இரண்டு முறை கடலுக்குள் இறங்கி தனது தேடலை தொடர்ந்து வருகிறார் யாசுவோ. “கடலுக்குள் இருக்கும்போதுதான் என் மனைவிக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று அவர் கூறுகிறார். பதில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.. ஆனால், யுகோவை தேடும் அந்த பயணம் மட்டும் இன்னும் முடியவில்லை..!!

English summary

Japanese Husband Dives 760 Times.. A Heartbreaking 15 Year Search for His Tsunami-Missing Wife

Read More

Previous Post

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது

Next Post

CSK பயிற்சியாளராக ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட என்ன காரணம்?

Next Post
CSK பயிற்சியாளராக ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட என்ன காரணம்?

CSK பயிற்சியாளராக ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட என்ன காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin