Last Updated:
நடிப்பு பிரிவுகளில், பிரம்மயுகம் படத்திற்காக மம்மூட்டிக்கும், சந்து சாம்பியான் படத்திற்காக கார்த்திக் ஆர்யனுக்கும், சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது
72-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்தலைவர் 2026 செப்டம்பர் 22 அன்று (நாளை) வழங்குகிறார். இதற்கான பணிகள் நிகழ்ச்சி நடைபெறும் குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2024-ம் ஆண்டில் இந்திய சினிமாவில் சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து மதிப்புமிக்க விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கவுள்ளார்.
இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாக தேசிய திரைப்பட விருதுகள் திகழ்கின்றன. 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விருதுகள் பல்வேறு மொழிகள், பிராந்தியங்களை உள்ளடக்கிய முழுநீள திரைப்படங்கள், திரைப்படங்கள் குறித்த எழுத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கின்றன.
இந்தியத் திரைப்படத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2024-ம் ஆண்டிற்கான தாதாசாஹேப் பால்கே விருது பழம்பெரும் நடிகர் ஆனந்த் நாகிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த முழுநீள திரைப்படமாக ஆர்டிகிள் 370-ம், சிறந்த புனைகதை சாரா திரைப் படமாக பங்கார்-ம், சிறந்த ஆவணப்படமாக ராம்-நமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடிப்பு பிரிவுகளில், பிரம்மயுகம் படத்திற்காக மம்மூட்டிக்கும், சந்து சாம்பியான் படத்திற்காக கார்த்திக் ஆர்யனுக்கும், சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்கப்படவுள்ளது. யாமி கெளதம் ஆர்டிகிள் 370 படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார். சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது சுதந்திர வீர் சாவர்க்கர் படத்தை இயக்கிய ரந்தீப் ஹூடாவிற்கு அளிக்கப்படவுள்ளது. கல்கி 2898 ஏடி, அமரன், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.


