மகளிர் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக அஞ்சல் துறை மூலம் ‘மகளிர் மதிப்பு திட்டம்-2023’ எனும் மகளிர் மேன்மை மதிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என புதுக்கோட்டை மாவட்ட தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் லலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து கூறுகையில் இதில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும். இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும் என தெரிவித்தார்.
மேலும், ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு தேவையான ஆவணங்கள் ஏற்கனவே அஞ்சலத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் திட்டத்திற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே போதுமானதாகும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை,ஃபான் கார்டு எண் ஆகியவற்றின் ஜெராக்ஸ் அத்துடன் இரண்டு ஃபோட்டோ இவை மட்டுமே தேவையான ஆவணங்கள் ஆகும்.
அந்த வகையில் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வை புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 22 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்ட தபால் நிலையங்களில் இந்த மகளிர் மேன்மை மதிப்பு திட்ட கணக்கு தொடங்கும் அனைத்து மகளிருக்கும் ஒவ்வொரு பிரிவின் கீழ் குழுக்கள் முறையில் பரிசு வழங்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…