வீடு கட்டுவதற்கான அட்வான்ஸ் தொகை, பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், உடல் நலக்கோளாறு, இறுதி பிராவிடண்ட் ஃபண்ட் செட்டில்மெண்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சமூக பாதுகாப்புப் பலன்கள் தொடர்புடைய கிளைம்களை இனி நீங்கள் ஆன்லைனிலேயே எழுப்பலாம். இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
EPFO அல்லது எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees Provident Fund Organisation) என்பது இந்தியாவின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக அமைகிறது. தற்போதைய தகவலின்படி, ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 7.5 கோடி நபர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (PF), பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு பங்களித்து வருகின்றன.
இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டுமே தோராயமாக 77 லட்சம் கிளைம்கள் வீடு கட்டுவதற்கான அட்வான்ஸ் தொகை, பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம், உடல் நலக்கோளாறு, இறுதி பிராவிடண்ட் ஃபண்ட் செட்டில்மெண்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சமூக பாதுகாப்பு பயன்கள் பூர்த்தி செய்யப்பட்டது. PF மெம்பர்கள் தங்களுடைய கிளைம்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
இது ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் மூலமாக சாத்தியமாக்கப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனானது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரில் (Universal Account Number – UAN) உள்ள ஒரு மெம்பரின் தகவல்களை சரிபார்க்கிறது.
இதையும் படிக்க: எழுத்து தேர்வு இல்லை… மாதம் ரூ.69,000 சம்பளம்… காலிப்பணியிடங்களை அறிவித்த எஸ்பிஐ!
உங்களுடைய ப்ரொபைலை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
இவ்வாறு ஆகஸ்ட் 22, 2023 அன்று EPFO வெளியிட்ட ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் ப்ரொசீஜர் (standard operating procedure – SOP) மூலமாக மெம்பர்களின் ப்ரொபைல்களில் உள்ள தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. தற்போது இது டிஜிட்டல் ஆன்லைன் மோடில் EPFOஆல் இயக்கப்பட்டு வருகிறது. PF மெம்பர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தங்களுடைய பெயர், பாலினம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், திருமண நிலை, தேசியம், ஆதார் உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்து கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்துடன் சேர்த்து நீங்கள் எழுப்பிய கோரிக்கை தொடர்புடைய தேவையான டாக்குமெண்ட்களையும் நீங்கள் கட்டாயமாக அப்லோட் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க:
உங்கள் PF கணக்கில் ரூ 5 லட்சம், ரூ 10 லட்சம் இருந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
இதுவரை 2.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன
இந்தியா முழுவதும் உள்ள PF அலுவலகங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக இதுபோன்ற அனைத்து கோரிக்கைகளும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. பல மெம்பர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை சமர்ப்பிக்க ஆரம்பித்து விட்டனர். EPFO வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கோரிக்கைகளில் 40 ஆயிரம் கோரிக்கைகள் ஏற்கனவே வட்டார அலுவலகங்களால் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. இன்றைய தேதி வரை, இதுபோன்ற 2.75 லட்சம் விண்ணப்பங்களை EPFO பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
