Last Updated:
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மோடியை சந்தித்து, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் சீனாவின் முயற்சிக்கு ஜெய்சங்கர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 24ஆவது இருதரப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அமைச்சர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31 மற்றும் ஒன்றாம் தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு வாங் யீ அழைப்பு விடுத்தார்.
இதனை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். மேலும், எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. மேலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்ல உள்ள அவர், இருதரப்பு விவகாரங்கள் குறித்து சீன அதிபருடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
August 20, 2025 9:17 AM IST


