வேலைக்கு செல்லும் தனி நபர்கள், அதுவும் பொறுப்புகளை தங்கள் தலை மீது சுமந்து குடும்பத்தை நடத்தி வரும் நபர்கள், ஒருவேளை அவர்கள் இறந்து விட்டால் அவர்களது குடும்ப பொருளாதார நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கான விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் விதமாக எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (EPFO) எம்ப்ளாயி டெபாசிட் லின்க்டு இன்சூரன்ஸ் திட்டத்தை (Employee Deposit Linked Insurance Scheme – EDLI) அறிமுகப்படுத்தி உள்ளது.
இது எம்ப்ளாயிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் எம்ப்ளாயிக்கு திடீரென மரணம் ஏற்படும் பட்சத்தில் நாமினிக்கு 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. EDLI திட்டமானது எம்ப்ளாயிகளுக்கு கூடுதல் இன்சூரன்ஸ் திட்டமாக அமைகிறது, இதில் நாமினேட் செய்யப்பட்ட பலன் பெறுபவர்களுக்கு 7 லட்ச ரூபாய் வரையிலான பொருளாதார ஆதரவு வழங்கப்படுகிறது.
ஒருவேளை நாமினி நியமிக்கப்படாத பட்சத்தில் எம்ப்ளாயியின் சட்ட ரீதியான வாரிசுகள் இடையே பணம் சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. எம்ப்ளாயிக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு, விபத்துக்கள் அல்லது இயற்கை மரணம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கான காப்பீடு கொடுக்கப்படுகிறது.
EDLI திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பலன் தொகையானது கடந்த 12 மாதங்களில் எம்ப்ளாயியின் சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒருவேளை எம்ப்ளாயி இறந்துவிடும் பட்சத்தில் கடந்த 12 மாத சம்பளத்தின் 30 மடங்கு சராசரியை பெறுவதற்கு நாமினி தகுதி பெறுகிறார். இதனுடன் சேர்த்து கூடுதலாக 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாத PF கழிவுத்தொகையில் 8.3 சதவீதம் எம்ப்ளாய் பென்ஷன் திட்டத்திற்கும் (EPS), 3.67 சதவீதம் EPF க்கும் மற்றும் 0.5 சதவீதம் EDLI திட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
பலன் பெறுபவர்கள் அக்கவுண்ட் ஹோல்டரின் இன்சூரன்ஸ் காப்பீட்டில் இருந்து குறைந்தப்பட்சமாக 2.5 லட்சம் ரூபாயையும், அதிகப்பட்சமாக 7 லட்சம் ரூபாயையும் கிளைம் செய்யலாம். குறைந்தப்பட்ச பலன் தொகைக்கு தகுதி பெற தனிநபர்கள் குறைந்தப்பட்சம் 12 மாதங்களாவது தொடர்ச்சியாக ஒரு வேலையில் பணிபுரிய வேண்டும். ஒருவேளை இடையிலேயே வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டால் இன்சூரன்ஸ் பலன்கள் பெறுவதற்கான உரிமை இழக்கப்படும்.
இதையும் படிங்க:
இனி ரயில் பயணங்களிலும் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யலாம்… எப்படி தெரியுமா..?
EDLI திட்டமானது PF இன்சூரன்ஸ் திட்டத்திலிருந்து வேறுபடுகிறது, அதாவது இந்த திட்டத்தில் பணியில் இருக்கும் பொழுது அக்கவுண்ட் ஹோல்டர் ஓய்வுக்கு முன்பு இறந்துவிடும் பட்சத்தில் மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படும். குறிப்பாக வேலை செய்யும் இடம் அதாவது அலுவலகமாக இருந்தாலும் சரி அல்லது விடுமுறை எடுத்திருந்தாலும் சரி அது PF இன்சூரன்ஸ் பலனை பாதிக்காது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
EDLI திட்டம் எம்ப்ளாயிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எதிர்பாராத சூழ்நிலைகளின் பொழுது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் தகுதி வரம்புகளை புரிந்து கொள்வதன் மூலமாக தனி நபர்கள் அவர்களது அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…