Last Updated:
நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் 7 ஆவது முறையாக பட்டம் வென்றார்.
நார்வேயில் நடந்த சதுரங்கப் போட்டியில், அதிக புள்ளிகள் பெற்று மேக்னஸ் கார்ல்சன் 7 ஆவது முறையாகப் பட்டம் வென்றார்.
ஓபன் பிரிவில் நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வந்த 10 சுற்றுப் போட்டிகளில், 6 வீரர்கள் பங்கேற்றனர்.
10 ஆவது சுற்றுப் போட்டி நடந்த நிலையில், 16 புள்ளிகளைப் பெற்ற மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்துப் பட்டம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் அமெரிக்காவின் கருவானா இரண்டாவது இடமும், உலக சாம்பியனான தமிழ்நாட்டு வீரர் குகேஷ் 14.5 புள்ளிகள் பெற்று 3 ஆவது இடமும் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் நகமுரா 4 ஆவது இடத்தையும், அர்ஜுன் எரிகைசி 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதனிடையே குகேஷுடனான தனது ஆட்டத்தில் கோபத்தை வெளிப்படுத்தியது குறித்து கார்ல்சன் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் சிறப்பாக விளையாடியதாகவும், அவர்களுக்குத் தயார் படுத்த இன்னும் சற்று நேரம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
June 07, 2025 8:33 AM IST


