கோலாலம்பூர், டிசம்பர் 8 –
மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் – LKIM இந்த ஆண்டு, அதன் ‘பேரிடர் நிவாரணம் மற்றும் மீனவர் நலத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 628 மீனவர்களுக்கு RM1.8 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது.
பருவமழை காலங்களில், குறிப்பாகக் கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் படகுகளைச் க்ஷ சரிசெய்வதற்காக, ஒவ்வொரு பயன் பெறுபவர்களும் RM10,000 வரைப் பெறலாம்.
LKIM தலைவர் முகமட் ஃபைஸ் ஃபட்சில் கூறுகையில், இந்த உதவி மீனவக் குடும்பங்களின் சுமையைக் குறைக்கவும் மற்றும் உணவுப் பாதுகாப்பை ஆதரிக்கவும் நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறினார்.
LKIM மற்றும் தனியார் நிறுவனங்களிடம் சுமார் 1,900 டன் மீன் கையிருப்பு உள்ளது.
நுகர்வோர் புரத ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும் இனப்பெருக்கப் பருவங்களுக்கு ஏற்பக் கடல் உணவுகளை வாங்கவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், பாச்சோக்கில் நடந்த, மடானி மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ், அவர் 100 மீனவர்களின் குழந்தைகளுக்கு RM8,600 மதிப்புள்ள பள்ளி உபகரணங்கள் மற்றும் வவுச்சர்களையும் வழங்கினார்.




