Last Updated:
நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீட்டா அம்பானி தனது 62 ஆவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீட்டா அம்பானி தனது 62 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
நீட்டா அம்பானிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜாம்நகரில் உள்ள இல்லத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் திரண்டு வந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். நீட்டா அம்பானி தனது ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.
மேலும் அங்குள்ள கோயிலில் தனது கணவருடன் நீட்டா அம்பானி மனமுருக வழிபாடு நடத்தினார். கணவர் முகேஷ் அம்பானியிடமும் நீட்டா அம்பானி ஆசிர்வாதம் பெற்றார்.
நீடா அம்பானியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
November 02, 2025 9:53 PM IST


