Last Updated:
பும்ராவைப் பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது. அவரது திறமைக்கு வார்த்தைகள் போதாது என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சுமார் 602 நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து அவர் இந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு பதிவிட்ட தோனி, “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது பெரிய வாழ்த்துகள். நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து தோனி ஒரு சுவாரசியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். “பயிற்சியாளர் சாப் (Coach Sahab), உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது. தீவிரம் மற்றும் புன்னகை ஆகியவற்றின் கலவை ஒரு ‘கில்லர் காம்போ’. சிறப்பாகச் செய்தீர்கள், மகிழுங்கள்,” என்று கம்பீரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், ஆட்டநாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா குறித்துக் குறிப்பிடுகையில், “சாம்பியன் பவுலர் பும்ராவைப் பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது. அவரது திறமைக்கு வார்த்தைகள் போதாது என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


