
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை ரூ.60,000 குறைந்துள்ளதுடன், இன்று (22) மட்டும் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.322,000 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.350,000 ஆகக் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

