சர்வதேச அளவில் முன்னணி கணினி நிறுவனமாக இருக்கும் டெல் டெக்னலாஜிஸ் (Dell Technologies), தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல் நிறுவனம் செலவை குறைக்கும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக சுமார் 6,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி டெல் நிறுவனம் கிட்டத்தட்ட 1,20,000 ஊழியர்களை கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 1,26,000-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங்கில் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில் நடப்பாண்டில் பணியாளர்களுக்காகும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் வெளிப்புற பணியமர்த்தல் (external hiring) மற்றும் பணியாளர் மறுசீரமைப்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிறுவனத்தின் நான்காம் காலாண்டு வருவாய் அறிக்கையில், நிறுவனத்தின் பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான தேவை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக மந்தமாக இருக்கும் சூழலில், இந்த நிலை கடைசி காலாண்டில் வருவாய் 11% வரை வீழ்ச்சி அடைய கணிசமாக பங்களித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது மக்களிடையே பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான தேவை குறைந்ததால் நிறுவனத்தின் வருவாய் 11 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. வருவாய் குறைந்ததன் காரணமாக டெல் நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், எனவே தான் பணிநீக்கம் என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்ததாகவும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
இதனிடையே சவால்கள் இருந்த போதிலும் பர்சனல் கம்ப்யூட்டர்ஸ் உட்பட அதன் கிளையன்ட் சொல்யூஷன் பிசினஸ் இந்த ஆண்டு வளர்ச்சியடைய கூடும் என்று நிறுவனம் அதன் எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங் மூலம் மதிப்பிட்டுள்ளது. தேவை குறைவது ஒருபக்கம் நிறுவனத்தை கவலையடைய செய்தாலும், விற்பனையை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் டெல் இருக்கிறது. 2025-ஆம் நிதியாண்டில் விலை நிர்ணய சூழல் மிகவும் போட்டித்தன்மையுடன் இருக்கும் என்றாலும் தங்கள் கணினி விலைகளை சரியாக வைத்து விற்பனையில் முன்னேறுவது வருவாயை அதிகரிக்க உதவும் என டெல் நிறுவனம் கூறியுள்ளது.
Also Read : PF மெம்பர் விவரங்களை திருத்த ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவத்தை நிரப்புவது எப்படி?
அதே நேரம் இன்புட் காஸ்ட்ஸ் உயரும் என்று டெல் எதிர்பார்க்கிறது மேலும் “VMware உடனான வணிக உறவில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, நிறுவனத்தின் பிற வணிகங்களின் நிகர வருவாயில் தொடர்ந்து சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான தேவை குறைந்தது மற்றும் சாத்தியமான மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டு, டெல் நிறுவனம் சுமார் 6,650 வேலைகளை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…