1997 முதல் 2003 வரையிலான ஆறு ஆண்டுகளில், உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் கங்குலிதான். அவர் 7,829 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் 7,525 ரன்கள் உடன் சச்சின் டெண்டுல்கர் இருந்தார். இதற்கிடையே, இதே காலகட்டத்தில் அதிகப்படியான பந்துகளைச் சந்தித்தவர் கங்குலி தான். வெறும் அதிரடி மட்டும் காட்டாமல், எதிரணியின் பந்துவீச்சைச் சோர்வடையச் செய்ய 10,000-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்டு மதில் போல நின்றார் கங்குலி.


