சர்தார் வல்லபாய் படேலின் சிலை நிறுவதற்கு சுமார் 6 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி, பில்கேட்ஸூடம் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசினர். சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கிய தலைப்புகளில் இருவரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பில்கேட்ஸ் பார்வையிடவுள்ளார் என்பதை அறிந்த பிரதமர் மோடி, சிலையை குறித்து படித்தீர்களா என கேட்டார். அதற்கு நான் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன் என கூற, சில சுவாரஸ்ய தகவல்களை அவருடன் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவின் ஒற்றுமை சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக விளங்கும் இந்த சிலையை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி திறக்கப்பட்து. இந்தியாவை ஒற்றிணைத்து கட்டமைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று கூறினார். ”நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, இந்த சிலையை கட்டுவதற்கான ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கினேன். அதன்படி, கிராம மக்களிடம் அவர்களின் தொழிலில் உபயோகப்படுத்தும் இரும்பை கொடுக்கக் கேட்டேன். அப்படி சுமார் 6 லட்சம் கிராமங்களில் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு சிலை கட்டுமானத்தில் உபயோகிக்கப்பட்டது.
Also Read : AI தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் இருக்க வேண்டும் – பில்கேட்ஸூடன் பிரதமர் மோடி
மேலும், அதேபோல் ஒவ்வொரு கிராமங்களில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு ஒற்றுமை சுவர் கட்டப்பட்டது. இந்த சிலை இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை எடுத்துகாட்டுகிறது” என கூறினார்.
கொரோனா காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், காதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்தில் AIஇன் முக்கியத்துவம் மற்றும் கிராமங்களில் தொழில்நுட்பத்தை கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு காரியங்களை பற்றி இருவரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…