• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் இதுதான்?

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் இதுதான்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 2:24 PM IST

கார்சியாவின் வழக்கறிஞர், அவர் பணியின்போது துன்புறுத்தப்பட்டதாக கூறினார். அதனால் தான் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

News18News18
News18

பல மாதங்களாக வேலைக்கு சென்ற பிறகு சில நாட்கள் விடுமுறையை கொண்டாட பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் அப்படி நடப்பது சாத்தியமற்றது? தினந்தோறும் அலுவலகம் செல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் முழு சம்பளம் கிடைக்குமா?. அப்படி கிடைத்தால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஸ்பெயினில் உள்ள ஒரு அரசு ஊழியருக்கு அப்படித்தான் நடந்துள்ளது. ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஆறு வருடங்கள் வேலை செய்யாமல், அலுவலகம் செல்லாமல், எந்தப் பொறுப்பும் எடுக்காமல் முழுச் சம்பளம் பெற்றார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோவாகின் கார்சியா என்ற நபர்.

இந்த சம்பவமானது ஸ்பெயினின் காடிஸ் நகரில் அரங்கேறியுள்ளது. ஜோக்வின் கார்சியா காடிஸில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார். ஜோக்வின் கார்சியா 20 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திடீரென ஒரு நாள், ஜோவாகின் கார்சியா எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மாயமானார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்யவில்லை, யாரிடமும் விடுமுறை சொல்லவில்லை. ஆனால் சில நாட்களாக ஜோக்வின் கார்சியா பணிக்கு வரவில்லை. எனினும் நீர் சுத்திகரிப்பு பணியில் வேலைபார்த்த அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இரு துறைகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. அதில் ஒரு துறையானது, மற்றொரு துறை கார்சியாவை மேற்பார்வையிடுகிறது என்று கருதினர். இதனால், அதிர்ஷ்டம் மற்றும் கவனக்குறைவால், கார்சியா நிறுவனத்தில் பணிபுரியாதது தெரியாமல் இருந்தது. இப்படி, ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை. தி கார்டியனின் அறிக்கையின்படி, ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை. எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் முழு சம்பளத்தையும் தொடர்ந்து பெற்றார். ஜோவாகின் ஆண்டுக்கு 41,500 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.36 லட்சம் பெற்றார். இது 6 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

ஜோவாகின் கார்சியாவை வேலைக்கு அமர்த்திய ஜார்ஜ் பிளாஸ் பெர்னாண்டஸ் கூறியதாவது, நீர் சுத்திகரிப்பு நிறுவனம் அவரைக் கண்காணித்து வருகிறது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது அப்படி இல்லை. ஜோவாகின் கார்சியா அலுவலகத்தில் இல்லாதது ஒரு சுவாரஸ்யமான வழியில் தெரியவந்தது என்று கூறினார். அதாவது ஜோவாகின் கார்சியா 20 ஆண்டுகளாக நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் நிறுவனத்திடமிருந்து எந்த விருதும் பெறவில்லை. எனவே கார்சியாவின் விசுவாசத்திற்காக ஒரு விருதை வழங்க நிறுவனம் முடிவு செய்தது. இந்த விருது கொடுக்க தேடப்பட்ட போது தான், ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, ஜோவாகின் கார்சியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வராதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கார்சியாவிடம் கேட்கப்பட்டது. கார்சியாவின் வழக்கறிஞர், அவர் பணியின்போது துன்புறுத்தப்பட்டதாக கூறினார். அதனால் தான் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதாவது, நீதிமன்றம் ஜோக்வின் கார்சியாவுக்கு 30 ஆயிரம் டாலர்கள் (ரூ.25 லட்சம்) அபராதம் விதித்து உத்தரவிட்டது.

First Published :

March 19, 2025 2:24 PM IST

Read More

Previous Post

Fixed deposit | மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்: மார்ச் 2025ல் அதிக வட்டி விகிதத்தை எந்த வங்கி வழங்குகிறது தெரியுமா?

Next Post

அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பதவிக்கால வரம்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் – Malaysiakini

Next Post
அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பதவிக்கால வரம்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் – Malaysiakini

அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் பதவிக்கால வரம்புகள் பயன்படுத்தப்பட வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin