• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE உத்தரவு.. தமிழ்நாட்டு கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி..!! | AICTE Report: 58 Engineering Colleges Closed in 2025–26 — UP & Maharashtra Lead, Tamilnadu 2 colleges closed

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE உத்தரவு.. தமிழ்நாட்டு கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி..!! | AICTE Report: 58 Engineering Colleges Closed in 2025–26 — UP & Maharashtra Lead, Tamilnadu 2 colleges closed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE உத்தரவு.. தமிழ்நாட்டு கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி..!!

2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் தான் நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் கல்லூரிகள் தரத்துடன் செயல்படுவதை மாணவர்களுக்கு சிறந்த கற்றல் வாய்ப்புகளை தருவதையும் , உறுதி செய்ய வேண்டியது ஏ.ஐ.சி.டி.இ. தான். அந்த வகையில் கல்லூரிகளின் தர நிலைகளை அவ்வப்போது கண்காணித்து விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளை மூடுவதற்கான நடவடிக்கையை ஏ.ஐ.சி.டி.இ., எடுத்து வருகிறது.

58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE உத்தரவு.. தமிழ்நாட்டு கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி..!!

அந்த வகையில் தான் 2025-26ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளிலும் நடத்தப்பட்ட சோதனையின்போது, குறைவான மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்காதது போன்றவை கண்டறியப்பட்டதால் 58 பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூடப்பட்ட 58 கல்வி நிறுவனங்களில், மூன்று அரசு உதவி பெற்றவை, மற்றவை தனியார் நிதியுதவியுடன் செயல்பட்டு வந்தவை. அதிகபட்சமான உத்தர பிரதேசம், மஹாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலுங்கானா மற்றும் பஞ்சாபில் தலா 4 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 3 கல்லூரிகளும், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தலா 2 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஹரியானா, ஒடிஷா, உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு கல்லூரி மூடப்பட்டுள்ளன.

இதனை Progressive closure என அழைக்கிறார்கள். அதாவது உடனே இந்த கல்லூரிகள் மூடப்பட்டுவிடாது. இந்த பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடக்காது. அதே வேளையில் இரண்டாம் ஆண்டு , மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர்கள் அங்கேயே தங்கள் படிப்புகளை தொடரலாம். இந்த கல்லூரிகளில் படிப்பை முடித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

எனவே ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை , ஆனால் புதிதாக யாரும் இங்கே சேர முடியாது. தமிழ்நாட்டில் இரண்டு கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே தவிர அவற்றின் பெயர் வெளியிடப்படவில்லை. எனவே தமிழ்நாட்டு பெற்றோர் 12ஆம் வகுப்பு முடித்த தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்க்கும் போதும் கவுன்சிலிங்கிலும் கல்லூரி தேர்வு செய்யும் போது அது ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்லூரியா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.

Share This Article

English summary

AICTE Report: 58 Engineering Colleges Closed in 2025–26 — UP & Maharashtra Lead, Tamilnadu 2 colleges closed

58 பொறியியல் கல்லூரிகளை மூட AICTE உத்தரவு.. தமிழ்நாட்டு கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி..!!-AICTE data shows 58 engineering and technical colleges were given progressive closure in 2025–26, with Uttar Pradesh and Maharashtra recording the highest number of shutdowns and over 950 courses affected.

Story first published: Monday, July 6, 2026, 11:07 [IST]

Other articles published on Jul 6, 2026

Read More

Previous Post

ட்ரம்ப்பிடம் மற்றுமொரு நாட்டை கோர்த்துவிட்ட நெதன்யாகு!

Next Post

குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: 2027-க்குள் 300 புதிய மழலையர் முன்பள்ளிகளைத் திறக்கிறது மடானி அரசு! | Makkal Osai

Next Post
குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: 2027-க்குள் 300 புதிய மழலையர் முன்பள்ளிகளைத் திறக்கிறது மடானி அரசு! | Makkal Osai

குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: 2027-க்குள் 300 புதிய மழலையர் முன்பள்ளிகளைத் திறக்கிறது மடானி அரசு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin