Last Updated:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் அணிகள் மோதின.
சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் 14 வயதாகும் இளம்பிறார் வைபவ் சூர்யவம்சி 58 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியாவில் உள்ளூர் அளவில் நடைபெறும் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக சையத் முஸ்டாக் அலி கோப்பை தொடர் கருதப்படுகிறது. தற்போது இந்த தொடர் டி20 ஃபார்மேட்டில் நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பீகார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவம்சி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் பந்துகளை சிதறடிக்க செய்தார்.
58 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார். அதாவது மிகவும் குறைந்த வயதில் சையத் முஸ்டாக் அலி தொடரில் சதம் அடித்த வீரர் என்கிற சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார் வைபவ் சூர்யவன்சி.
December 02, 2025 8:41 PM IST


