Last Updated:
இத்திட்டம் தாய்மார்களுக்கு பாதுகாப்பான பிரசவத்திற்கும், முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கும் உதவுகிறது
உரிய விதிகளுக்கு உட்பட்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் தவணைகளில் ஆறாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நிதி உதவி பிரதமரின் பேறுகால தாய்மார்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனப்படும் பிரதமரின் தாய்மார்கள் நல திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மகப்பேறு பலன் கிடைக்கிறது.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது.
இத் திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ₹5,000/-தொகை வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளி மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் மகப்பேறு நன்மைக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீதமுள்ள ரொக்க ஊக்கத்தொகையைப் பெறுகிறார், இதனால் சராசரியாக, ஒரு பெண் ₹ 6,000/- பெறுகிறார்.
இதற்கான இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2023-24 நிதியாண்டின் போது, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 53,76,728 ஆக இருந்தது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
March 20, 2025 10:59 PM IST
56 லட்சம் பேருக்கு ₹ 6,000 … பிரதமரின் பேறுகால தாய்மார்கள் திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

