• Login
Sunday, June 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

55.30 % ஸ்காட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்

GenevaTimes by GenevaTimes
March 3, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
55.30 % ஸ்காட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


19 செப்டெம்பர் 2014

வாழ்நாள் வெற்றியை வாய் நிறைந்த சிரிப்போடு கொண்டாடி மகிழும் வென்றவர் தரப்பு

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

வாழ்நாள் வெற்றியை வாய் நிறைந்த சிரிப்போடு கொண்டாடி மகிழும் வென்றவர் தரப்பு

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மீதமுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களின் வாக்காளர்களின் பெரும்பான்மையானவர்கள் ஸ்காட்லாந்து பிரிந்து செல்லக்கூடாது என்றே வாக்களித்திருந்தனர். இதில் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பரா வாக்காளர்களும் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எடின்பரா வாக்காளர்களில் 61.10 சதவீதம் பேர் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 20,01,926 பேரும், ஸ்காட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,617,989 பேரும் வாக்களித்திருந்தனர். இரு தரப்பாருக்கும் இடையில் 3,83,937 வாக்குகள் வித்தியாசம் இருக்கின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததைவிட, பிரிவினையை எதிர்ப்பவர்களின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்திருப்பதை இன்று வெளியான இறுதிமுடிவுகள் காட்டுகின்றன.

தோல்வியின் வலிக்கு தோழமையின் தோளில் ஆறுதல் தேடும் தோற்றவர் தரப்பு
படக்குறிப்பு,

தோல்வியின் வலிக்குத் தோழமையின் தோளில் ஆறுதல் தேடும் தோற்றவர் தரப்பு

நேற்று வியாழக்கிழமை ஸ்காட்லாந்து முழுவதும் நடந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 42,83,392 பேர். இதில், 84.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு வரலாற்றில் மிக அதிக சதவீத வாக்குப்பதிவாக கருதப்படும் இந்த கருத்தெடுப்பில் 3,429 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய கருத்தறியும் வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் வெளியான யுகவ் நிறுவன எக்ஸிட் வாக்கெடுப்பு ஒன்று பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு 54 சதவீத ஆதரவும், சுதந்திரம் கோரும் தரப்புக்கு 46 சதவீத ஆதரவும் இருப்பதாகக் கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

இந்தியாவின் மின்னனு தயாரிப்பில் ஆப்பிள் வளர்ச்சி

Next Post

நிறுவன இடமாற்றங்கள் மூலம் 3.8 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது – புக்கிட் அமான் | Makkal Osai

Next Post
நிறுவன இடமாற்றங்கள் மூலம் 3.8 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது – புக்கிட் அமான் | Makkal Osai

நிறுவன இடமாற்றங்கள் மூலம் 3.8 பில்லியன் ரிங்கிட் சட்டவிரோத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது – புக்கிட் அமான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin