பெங்களூரு : “விவசாய நீர்ப்பாசனத்துக்கு, சோலார் பம்ப்செட் பொருத்த 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்,” என, மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பெங்களூரின் ஜி.கே.வி.கே.,வில், மார்ச் 9ல், விவசாய சோலார் மின் உற்பத்தி மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா மேளாவை துவக்கி வைப்பார். சோலார் பம்ப்செட், மான்யம் உட்பட, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் மேளாவில் தெரிவிக்கப்படும்.
சோலார் பம்ப்செட் பயன்படுத்த, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாதில அரசு திட்டம் வகுத்துள்ளது. மேளாவில் சோலார் பம்ப் செட் குறித்து, விரிவான தகவல் தெரிந்து கொண்டு, தங்கள் நிலத்தில் நிறுவலாம்.
இதுவரை சோலார் பம்ப்செட் பொருத்த, 30 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு சார்பில் பம்ப், மீட்டர், பைப் வசதி செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement