Last Updated:
Egg Price: 50 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அளவிற்கு நாமக்கலில் முட்டை விலை உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
அதன்படி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி முட்டை ஒன்று அதிகபட்சமாக 5 ரூபாய் 90 காசுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
50 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலை ஆகும். இது கொள்முதல் விலை மட்டுமே. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்று 6 ரூபாய் 50 காசுகள் முதல் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கியதால் அங்கு முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அதேசமயம் அங்கு முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது.
அதேபோல் வெளிநாடுகளுக்கு சாதாரணமாக 30 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக அது நாளொன்றுக்கு 1 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வருவதாகவும் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், விலை உயர்த்தப்பட்டதாகவும் இனி வருங்காலங்களில் முட்டையின் விலை நாமக்கல்லில் அதிகபட்சமாக 6 ரூபாய் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்தனர்.
Namakkal,Tamil Nadu
November 16, 2025 11:13 AM IST


