2013-ல் உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 40 குழந்தைகள் தங்கள் முதல் ஆண்டை தாண்ட முடியாமல் உயிரிழந்த நிலையில், 2023இல் அது 25ஆகக் குறைந்துள்ளது. இது 37.5% குறைப்பை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதத்தில் 80% குறைவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அதிக குழந்தை இறப்பு விகிதம்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் – தலா 37
குறைந்த குழந்தை இறப்பு விகிதம்: மணிப்பூர் – 3 (முதலிடம்)
ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் பெற்ற மாநிலங்கள்: 21
பெரிய மாநிலங்களில் சிறந்த சாதனை: கேரளா – 5 (மணிப்பூருக்குப் பிறகு இரண்டாம் இடம்)
குழந்தை இறப்பு விகிதம் நாடு முழுவதும் சரிவைக் கண்டுள்ளது:
கிராமப்புறங்கள்: 44 → 28 (36% குறைவு)
நகர்ப்புறங்கள்: 27 → 18 (33% குறைவு)
இதன்மூலம், சுகாதார சேவைகளின் அணுகல் மற்றும் தரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதே நேரத்தில் இந்த அறிக்கை, நாட்டில் பிறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கிறது. அதாவது,
- 1971இல் 36.9-இல் இருந்து, 2023இல் 18.4ஆகக் குறைந்திருக்கிறது.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பிறப்பு விகிதம் சுமார் 14% சரிவைக் கண்டுள்ளது.
கிராமப்புறம்: 22.9 → 20.3 (11% குறைவு)
நகர்ப்புறம்: 17.3 → 14.9 (14% குறைவு)
அதிகபட்சம் – பீகார்: 25.8
குறைந்தபட்சம் – அந்தமான் & நிக்கோபார் தீவுகள்: 10.1
1971இல் 14.9 – இல் இருந்து, 2023 – இல் 6.4ஆகக் குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் 7.2 → 6.8
நகர்ப்புறங்களில் 6.0 → 5.7
அதிகபட்சம் – சத்தீஸ்கர்: 8.3
குறைந்தபட்சம் – சண்டிகர்: 4
இந்த அறிக்கை, இந்தியாவின் சுகாதார துறையில் கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள், சுகாதார சேவை விரிவாக்கம், தடுப்பூசி திட்டங்கள் மற்றும் மகளிர்-குழந்தைகள் நலன் சார்ந்த முன்னெடுப்புகள் ஆகியவை கணிசமான பலனை அடைந்து வருவதை காட்டுகிறது.
September 07, 2025 3:23 PM IST

