எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரிட்டிஷ் பெண் ஒருவர் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய கெதரின் எலிஸ் என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
எல்ல 980 ஹோட்டலின் மீட்புக் குழுவினர் மற்றும் எல்ல பொலிஸார் இணைந்து குறித்த பெண்ணை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

