அமெரிக்காவின் நியூஜெர்சி மற்றும் நியூயார்க் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் 5.5. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோன்று, நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், ப்ரூக்லின் பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. பென்சில்வேனியா, பால்டிமோர், பிலடெல்பியா, கனெக்டிகட் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் காசா போர் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நில அதிர்வு உணரப்பட்டதால், அந்த கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
நிலநடுக்கம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், அனைத்தும் கட்டுக்குள் இருப்பதாக விளக்கமளித்தார். இந்நிலையில், இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.2 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
