இது குறித்து பெக்கி கூறுகையில், “இதற்கு முன்பு அவள் அப்படிச் செய்ததில்லை; அவள் முதலில் எழுந்ததும் நான் பயந்துவிட்டேன், ஏனென்றால் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவளால் முழுமையாக எழ முடியவில்லை, பேசவும் முடியவில்லை. ஆனால், அவள் தலையசைத்தபடி இருந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய பின்னும் நன்றாகத் தூங்கி கொண்டே இருப்பாள். மாதங்கள் செல்லச் செல்ல வலுப்பெற்று விழித்திருக்க ஆரம்பித்தாள்.
எல்லா கனவும் நனவாகும். இன்று நான் அதைச் சொல்ல முடியும். எங்களைப் பிரித்திருந்த மூடிய கதவு ஒன்று இன்று திறந்தது. நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம்’’ என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஜெனிஃபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ரால்ப் வாங் கூறுகையில், “இது மிகவும் அரிதானது. மீளமுடியாத கோமாவில் இருந்து எழுவது மட்டுமல்லாமல், இவரின் உடல்நலமும் முன்னேறி வருகிறது. இதுபோன்ற நிலையில் ஒன்றிரண்டு சதவிகித நோயாளிகள் எழுந்திருக்கும் அளவுக்கும் முன்னேற்றம் அடையலாம்’’ என்று விளக்கமளித்துள்ளார்.
ஜெனிஃபர் தன் மகன் ஜூலியனின் கால்பந்து விளையாட்டைப் பார்க்கச் சென்றுள்ளார். ஜெனிஃபர் கோமா நிலைக்குச் செல்கையில் அவரின் மகன் ஜூலியனுக்கு 11 வயது இருக்கும். இப்போது தன் மகனின் விளையாட்டைக் காண மைதானம் சென்றுள்ளார். இந்தச் செய்தி மக்களிடையே கவனம் பெற்று வருகிறது.
அவங்க அம்மா என்ன ஜோக் சொல்லி இருப்பாங்கனு நினைக்குறீங்க..?! கமென்ட்டில் சொல்லுங்கள்!