Last Updated:
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலருக்கு மேலாக உச்சம் கண்டுள்ளதால், சர்வதேச பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டங்கள் ஏதுமில்லை என்றும், வெற்றுப் பேச்சுக்கள் மட்டுமே உள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலருக்கு மேலாக உச்சம் கண்டுள்ளதால், சர்வதேச பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 94.01 ரூபாய் என வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து 100-ஐ நெருங்கி வருவது பணவீக்கத்திற்கான அறிகுறி என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு தெளிவான பொருளாதார வியூகத்திற்குப் பதிலாக வீண் பேச்சுகளையே முன்வைப்பதாகக் கூறினார்.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைவதால், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்றாடப் பொருட்களின் விலைகள் உயரும் என்றும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5 மாநில தேர்தல்கள் முடிந்த பிறகு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகளை உயர்த்தும் என்று அவர் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Mar 22, 2026 10:56 AM IST
“5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயரும்” – பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!


