5 ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 4 கட்டங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 5 ஆம் கட்டத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது.
இதில், பிகார், மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மற்றும் லடாக் மக்களவைத் தொகுதிக்கும் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனால் இறுதிகட்ட பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ, கைசர்கன்ஜ் உள்ளிட்ட தொகுதிகளில் கட்சி தலைவர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
