• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

5 நாட்களாகக் காணாமல் போன 105 வயது முதியவர் சடலமாக மீட்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 9, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
5 நாட்களாகக் காணாமல் போன 105 வயது முதியவர் சடலமாக மீட்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீத்தாஸ்:

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த 105 வயது முதியவர், நேற்று காலை கம்போங் பொண்டோய் (Kampung Pondoi) அருகே உள்ள ஒரு சிற்றோடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஜனவரி 3-ஆம் தேதி மாலை 4.11 மணியளவில் பக்கார் சம்பெலிட் (Bakar Sampelit) என்ற அந்த முதியவர், வீட்டில் இல்லாததைக் கண்ட குடும்பத்தினர், அவரைத் தேடினர். அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR), நேற்று காலை 10.52 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஓடையில் அவரது உடலைக் கண்டெடுத்தனர் என்று, கோத்தா மருடு மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன் சிமியுன் லோமுடின் கூறினார்.

உயிரிழந்த முதியவர் ‘டிமென்ஷியா’ (Dementia) எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். பலத்த மழை பெய்த நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் பொதுவாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பார் என்றும், பெரும்பாலும் அவராகவே திரும்புவார் அல்லது கிராம மக்கள் அவருக்கு உதவுவார்கள் என்றும் கூறப்பட்டது.

முதியவரின் உடல் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக பீத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை போலீசார் தற்போது ஒரு ‘காணாமல் போன நபர்’ (Missing Person) புகாராக வகைப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.



Read More

Previous Post

அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!

Next Post

பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு மூடப்படும்

Next Post
பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு மூடப்படும்

பதுளை மாவட்ட பாடசாலைகள் 11 மணிக்கு மூடப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin