Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான 8 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார். கானா, டிரினிடேட் டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கிறார். BRICS மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
lஅபிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசு முறைப் பயணமாக நாளை புறப்படுகிறார். ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி வரை 8 நாள் பயணமாக செல்ல உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட நீண்ட நாள் பயணமாக இது அமையவுள்ளது.
முதலில் கானா நாட்டிற்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து இரட்டைத் தீவு கரீபியன் நாடான டிரினிடேட் டுபாகோவிற்குச் செல்ல உள்ளார். அங்கிருந்து அர்ஜெண்டினா செல்லும் பிரதமர், பின்னர் பிரேசில் நாட்டிற்குச் சென்று,அங்கு BRICS மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அங்கிருந்து, இறுதியாக நமீபியா நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ளார்.
30 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமராக கானா நாட்டிற்குச் செல்லும் மோடி, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். Trinidad & Trobago நாட்டுப் பிரதமர் கமலா பெர்சாத்தின்ன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.
Delhi,Delhi,Delhi
July 01, 2025 7:54 PM IST
5 நாடுகள்… 8 நாட்கள்… 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் நீண்ட நாள் வெளிநாட்டு பயணம் இதுதான்… திட்டம் என்ன?