• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Playing for 5 sessions is not easy: Gautam Gambhir

GenevaTimes by GenevaTimes
July 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Playing for 5 sessions is not easy: Gautam Gambhir
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது.

ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஜோடி மிக அற்​புத​மாக விளை​யாடி இங்​கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்​பை​யும் கொடுக்​காமல் அந்த அணி வீரர்​களை களத்​தில் வெகு நேரம் பீல்​டிங் செய்ய வைத்து சோர்​வடையச் செய்​தது. இந்த ஜோடி 334 பந்​துகளை சந்​தித்து 203 ரன்​களை வேட்​டை​யாடியது.

கடைசி நாள் ஆட்​டத்​தில் 15 ஓவர்​கள் மீதம் இருந்த நிலை​யில் போட்​டியை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் முன்​வந்​தார். ஆனால் இதை ஜடேஜா ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை. அப்​போது ஜடேஜா 90 ரன்​களும், வாஷிங்​டன் சுந்​தர் 85 ரன்​களை​யும் கடந்து சதத்தை நெருங்​கும் நிலை​யில் இருந்​தனர். குழு விளை​யாட்​டில் எப்​போதும் தனி​நபர் சாதனைக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கக்​கூ​டாதது​தான்.

ஆனால் இவர்​கள் இரு​வரும் போராடிய விதம் அவர்​கள், சதம் அடிக்க தகு​தி​யானவர்​கள் என்ற கருத்தே கிரிக்​கெட் ரகி​கர்​கள் அனை​வரது மனதி​லும் மேலோங்​கி​யிருந்​தது. இறு​தியாக ஜடேஜா 5-வது சதத்​தை​யும், வாஷிங்​டன் சுந்​தர் முதல் சதத்​தை​யும் நிறைவு செய்து ஆட்​டத்தை டிரா செய்​தனர். போட்டி டிரா​வில் முடிவடைந்த போதி​லும் களத்​தில் போட்​டியை பார்த்த ரசிகர்​கள் எந்த ஒரு கட்​டத்​தி​லும் சலிப்​படைய​வில்​லை. அந்த அளவுக்கு ஜடேஜா​வும் (107*), வாஷிங்​டன் சுந்​தரும் (101*) இங்​கிலாந்து அணி​யின் பந்து வீச்​சுக்கு பதிலடி கொடுத்​தனர். அதி​லும் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் வாஷிங்​டன் சுந்​தர் ஹூக் ஷாட்​டில் சிக்​ஸர் விளாசிய விதம் அற்​புத​மானது.

தோல்வி அடைவதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருந்த நிலை​யில் அதற்கு இடம் கொடுக்​காமல் இந்​திய அணி அற்​புத​மாக விளை​யாடி களத்​தில் இங்​கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்த விதம் பாராட்​டும் வகை​யில் இருந்​தது. இந்த போட்டி டிரா​வில் முடிவடைந்​தா​லும் இது வெற்​றிக்கு நிக​ராக கருதவேண்​டிய ஆட்​டமே.

தோல்​வி​யின் விளிம்பை எட்​டிப்​பார்க்க கூடிய இடத்​தில் இருந்து ஆட்​டத்தை டிராவை நோக்கி நகர்த்​திய இந்​திய அணி வீரர்​களின் மனரீ​தி​யான போராட்​டம் ஒட்​டுமொத்த இங்​கிலாந்து அணி​யை​யும் விரக்​திக்கு கொண்டு சென்​றது என்​று​தான் கூற வேண்​டும். இது​தான் கடைசி ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தாக அந்த அணி வீரர்​கள் நடந்​து​கொண்ட விதத்தை வெளிக்​காட்​டியது.

இந்த ஆட்​டத்​தின் முடி​வானது வரும் 31-ம் தேதி லண்​டனில் தொடங்க உள்ள கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்​பார்ப்பை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. மான்​செஸ்​டர் போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது, இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீரிடம், 4-ம் நாள் ஆட்​டத்​துக்கு பிறகு இந்​திய அணி வீரர்​களிடம் 2009-ம் ஆண்டு நீங்​கள் நேப்​பியரில் போராடி சேர்த்த 137 ரன்​களைப் பற்​றிக் குறிப்​பிட்டு உத்​வேகம் கொடுத்​தீர்​களா என்று கேள்வி கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்து கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: நான் விளை​யாடிய எந்த இன்​னிங்​ஸும் நினை​வில் இல்​லை, அது வரலாறாக மாறி​விட்​டது. தற்​போது இந்​திய அணி​யில் உள்ள வீரர்​கள் தங்​களது சொந்த வரலாற்றை உரு​வாக்க வேண்​டும் என்று நினைக்​கிறேன். உண்​மை​யாக சொல்ல வேண்​டும் என்​றால், இந்த அணி​யில் யாரும் யாரை​யும் பின்​தொடரு​வது இல்​லை, அதை அவர்​கள் விரும்​புவதும் இல்​லை. வீரர்​கள் தங்​கள் சொந்த வரலாற்றை உரு​வாக்க வேண்​டும்.

இந்த வீரர்​கள் நாட்​டுக்​காக போராட விரும்​பு​கிறார்​கள், அதை அவர்​கள் தொடர்ந்து செய்​வார்​கள். 5 செஷன்​கள் வீரர்​கள் அழுத்​தத்​தின் கீழ் விளை​யாடிய உள்​ளார்​கள். இது​போன்ற சூழ்​நிலைகளில் அழுத்​தத்​தில் இருந்து வெளியே வந்து விளை​யாடு​வது எப்​போதுமே சிறப்​பான விஷ​யம். இது வீரர்​கள் மத்​தி​யில் நம்​பிக்​கையை கொடுக்​கும். இந்த செயல் திறன் ஓவலில் நடை​பெறும் போட்​டிக்கு நம்​பிக்​கையை கொடுக்​கும் என்று நம்​பு​கிறேன். ஆனால் நாங்​கள் எதை​யும் சாதா​ரண​மாக எடுத்​துக்​கொள்ள முடி​யாது.

இந்​திய அணி மாற்​றத்​துக்​கான கட்​டத்​தில் இருப்​ப​தாக நான் நினைக்​க​வில்​லை. ஏனெனில் இது இந்​திய அணி. அணியை பிர​திநித்​து​வப்​படுத்​தும் சிறந்த 18 வீரர்​கள் உள்​ளனர். அனுபவம் மற்​றும் அனுபவ​மின்மை ஆகிய​வற்​றையே கருத்​தில் கொள்ள வேண்​டும். நாங்​கள் அப்​படி​தான் பார்க்​கிறோம். முக்​கிய​மான விஷ​யம் என்​னவென்​றால் கடைசி நாளில் விளை​யாடிய விதத்​தில் இருந்து வீரர்​கள் அதி​கம் கற்​றுக்​கொண்​டுள்​ளனர். ஏனெனில் அழுத்​த​மான சூழ்​நிலை​யில் தாக்​குதல் பந்து வீச்சை கொண்ட இங்​கிலாந்து போன்ற அணிக்கு எதி​ராக 5 செஷன்​கள் விளை​யாடி 4 விக்​கெட்​களை மட்​டுமே இழந்​து போட்​டியை டிரா செய்​​வது என்​பது எளி​தானது அல்​ல. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​னார்​.



Read More

Previous Post

அதிமுக எம்.பி.யாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு: மாநிலங்களவையில் கடவுளின் பெயரால் தமிழில் உறுதி ஏற்றனர் | AIADMK Inbadurai and Dhanapal take oath as rajya sabha MP

Next Post

புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம் | New Mutual Fund Scheme Kotak Mahindra Launches

Next Post
புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம் | New Mutual Fund Scheme Kotak Mahindra Launches

புதிய பரஸ்பர நிதி திட்டம்: கோடக் மஹிந்திரா அறிமுகம் | New Mutual Fund Scheme Kotak Mahindra Launches

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin