Last Updated:
இந்த போட்டியில் இந்தியாவுடைய வெற்றியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதை அடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடர் தோல்வியை தவிர்க்க முடியும். அத்தகைய நெருக்கடியில் இந்திய அணி களம் காண்கிறது. இங்கிலாந்தை பொறுத்த அளவில் நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கடைசி மேட்சை இங்கிலாந்து அணி டிரா செய்தாலே தொடரை எளிதாக வென்று விடும். இருப்பினும் அந்த அணியில் கேப்டன் ஸ்டோக்ஸ், முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை. இதேபோன்று இந்திய அணியிலும் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் கே. எல். ராகுல், யசஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்கள்.
July 31, 2025 4:36 PM IST