Last Updated:
ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை சமன் செய்யும் என்ற சூழலில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சன் 37 ரன்களும், அபிஷேக் சர்மா 34 ரன்களும் குவித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் இணைந்த திலக் வர்மா – ஹர்திக் பாண்ட்யா இணை தென்னாப்பிரிக்கா பவுலிங்கை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 10 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 231 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.


