சென்னை, இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு, ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
முதல்-அமைச்சர் நம்பியுள்ளார்
கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதல்-அமைச்சர் நம்பியுள்ளார் அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சி.ஐ.ஐ சார்பில் “தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026” நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசியதாவது:-
சமூக நீதி
அரசியல் ரீதியாக அண்ணாதுரையின் திராவிட நோக்கமான சமத்துவத்தை வைத்து அதிலிருந்து அரசியலாக மாறி அரசு அனைவருக்கும் கல்வி, சமூக நீதி, பொருளாதார விடுதலை அனைவருக்கும் சமமாக கிடைக்க செயல்பட்டு வருகின்றோம். ஜாதி,மத,வேறுபாடு இல்லாமல் அரசு அனைவருக்கும் என்ற சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். எம்ஜிஆர், அண்ணா நோக்கத்தில் இந்த அரசு உருவாகியுள்ளது.



