
Last Updated:
கேரளாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், 5 ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறப்பு படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விளையாட்டு வீராங்கனையை, 13 வயது முதல் 18 வயது வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடர்பாக பத்தினம்திட்டா, பந்தளம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இதுவரை 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
62 பேர் மீது குற்றச்சாட்டுப்பட்டுள்ள நிலையில், 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை பலர் சிக்கியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய பலர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு கொடுமை இழைத்தவர்களின் பெயரை அந்த வீராங்கனை டைரியில் குறிப்பிட்டிருந்தது வழக்கு விசாரணைக்கு உதவியாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
January 13, 2025 7:41 PM IST

