Last Updated:
63 டி 20 போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடியுள்ள அர்தீப் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களம்காணவுள்ளார்.
நாளை தொடங்கவுள்ள 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழலில் அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களம்காணவுள்ளது, இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் மாற்றப்படவுள்ளனர். காயம் காரணமாக விலகிய ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார்.
வேலைப்பளு காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ள நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிற்கு பதிலாக மீண்டும் ஆகாஷ் தீப் அணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சி.எஸ்.கே. வீரர் அன்ஷுல் கம்போஜ் பெரிய அளவில் சோபிக்காததன் காரணமாக அவருக்கு பதிலாக டி20-ல் கலக்கி வரும் அர்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
63 டி 20 போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடியுள்ள அர்தீப் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களம்காணவுள்ளார். சிராஜ் – ஆகாஷ்தீப் – அர்தீப் சிங் வேகப்பந்துவீச்சாளர் கூட்டணியில் இந்திய அணி களமிறங்க திட்டமிட்டுள்ளது.
சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் அசத்த காத்திருக்கின்றனர். அத்துடன் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவை களமிறக்கவும் வாய்ப்புள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர்/குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.
July 30, 2025 8:49 PM IST