லாட்டரியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் சிங்கப்பூர் மக்களுக்கு அதிகம் இருக்கும், அதற்கான தனித்துவமான வழிகளை அவர்கள் எப்போதும் உருவாக்கி கொண்டிருப்பார்கள்.
கடந்த ஜூலை 26 சனிக்கிழமை, 4D லாட்டரில் “7217” என்ற எண் சட்டென்று விற்றுத் தீர்ந்தது.
4D லாட்டரி போட்டாபோட்டி
அப்படி என்ன அந்த குறிப்பிட எண்ணுக்கு மட்டும் மவுசு அதிகம் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால் அது தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளத்தில் விழுந்த காரின் பதிவு எண் என்பது தெரியவந்தது.

சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளத்தில் மேலோட்டமாக சோதித்ததில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) குலுக்கலுக்கான எண் சனிக்கிழமை இரவு 8:30 மணிக்குள் விற்றுத் தீர்ந்தது தெரியவந்தது.
இதில் சோகமான செய்தி என்னவென்றால், “7217” என்ற அந்த எண் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த இரு குலுக்களிலும் வெற்றி பெறவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நடந்த குலுக்களில் முதல் பரிசை தட்டிய எண் “7280” ஆகும்.

Photos Nicholas Tan & Singapore Pools